நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: 10-ம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன்

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில், மாவட்ட வாரியாக தி.மு.க. சார்பாக போட்டியிடும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் 10-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது.பட்டியல் விபரம்:1-வது கட்ட வேட்பாளர் பட்டியலில் விழுப்புரம் மத்திய மாவட்டம், தஞ்சை வடக்கு மாவட்டம், கும்பகோணம், தூத்துக்குடி வடக்கு மாவட்டம், காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட வேட்பாளர் பட்டியல் பெயர் இடம் பெற்றிந்தனர்.2-வது கட்ட வேட்பாளர் பட்டியலில் வேலூர், இராணிப்பேட்டை, வேலூர் மத்திய மாவட்டம், தஞ்சை மத்திய மாவட்டம் திருநெல்வேலி கிழக்கு மாவட்டம், திருநேல்வேலி மத்திய மாவட்டம், தூத்துக்குடி தெற்கு மாவட்ட வேட்பாளர்கள் பெயர் இடம் பெற்றன.3-வது கட்ட வேட்பாளர்கள் பட்டியலை நேற்று திமுக வெளியிட்டுள்ளது. சென்னை, தாம்பரம் மாநகராட்சிகள் மற்றும் செங்கல்பட்டு, மறைமலைநகர், குன்றத்தூர், மாங்காடு, நந்திவரம்- கூடுவாஞ்சேரி, திருச்சி மத்திய மாவட்டம் திருச்சி தெற்கு மாவட்டம், திருச்சி வடக்கு மாவட்டம், திருவண்ணாமலை தெற்கு மாவட்டம், திருவண்ணாமலை வடக்கு மாவட்டம், தென்காசி தெற்கு மாவட்டம், கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்டம், சேலம் மத்திய மாவட்டம் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர்.4-ம் கட்ட வேபட்ளார் பட்டியலில் வேலூர் மேற்கு, கரூர், நாமக்கல் கிழக்கு, நாமக்கல் மேற்கு, நாமக்கல் தெற்கு, கிருஷ்ணகிரி கிழக்கு, கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட வேட்பாளர் பட்டியல் இடம்பெற்றனர்.5-ம் கட்ட வேட்பாளர் திருவள்ளூர் மத்திய மாவட்டம், கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்டம், தஞ்சை தெற்கு மாவட்டம், விருதுநகர் தெற்கு மாவட்டம், நீலகிரி மாவட்டம், திருச்சி மத்திய மாவட்டம், சேலம் கிழக்கு, சேலம் மேற்கு மாவட்டம், தருமபரி மேற்கு மாவட்டம், மதுரை வடக்கு மாவட்டம், மதுரை தெற்கு மாவட்டம், தூத்துக்குடி தெற்கு மாவட்டம், திருப்பூர் மத்திய மாவட்டம், பெரம்பலூர் மாவட்டம், ஆகிய மாவட்டங்களின் வேட்பாளர்கள் இடம் பெற்றுள்ளனர்.6-ம் கட்ட வேபட்ளார் பட்டியலில் விழுப்புரம், திண்டிவனம் நகராட்சி, செஞ்சி, அனந்தபுரம், மரக்காணம் பேரூராட்சி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. கடலூர் மேற்கு மாவட்டத்துக்கு உள்பட்ட விருத்தாசலம், நெல்லிக்குப்பம், பண்ருட்டி நகராட்சிகளுக்கும், தொரப்பாடி, பெண்ணாடம், மங்கலம்பேட்டை, மேல்பட்டாம்பாக்கம் ஆகிய பேரூராட்சிகளுக்கும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். தஞ்சை மத்திய மாவட்டத்துக்கு உள்பட்ட ஒரத்தநாடு, வல்லம், திருவையாறு, மேலத்திருப்பூந்துருத்தி, திருக்காட்டுப்பள்ளி பேரூராட்சிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் பெயர்களும் இடம்பெற்றுள்ளன. மேலும், புதுக்கோட்டை தெற்கு மாவட்டத்துக்குள்பட்ட அறந்தாங்கி நகராட்சி, பொன்னமராவதி, அரிமளம், கீரமங்கலம், ஆலங்குடி பேரூராட்சிகளுக்கும் திமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.7-ம் கட்ட வேட்பாளர் பட்டியலில் மதுரை மாநகராட்சி, மதுரை தெற்கு மாவட்டம், மதுரை வடக்கு மாவட்டம்  திண்டுக்கல் மேற்கு மாவட்டம், விருதுநகர் வடக்கு மாவட்டம், இராமநாதபுரம் மாவட்டம், சிவகங்கை மாவட்டம், திருப்பூர் கிழக்கு மாவட்டம் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.8-ம் கட்ட வேட்பாளர் பட்டியலில் மதுரை தெற்கு, திருவள்ளூர் மத்திய மாவட்டம், திருவள்ளூர் மேற்கு, கோவை வடக்கு மாவட்டம், கோவை கிழக்கு, கடலூர் கிழக்கு, திருவள்ளூர் கிழக்கு, ஈரோடு வடக்கு, தருமபுரி கிழக்கு, நாமக்கல் மேற்கு மாவட்டம், ஈரோடு தெற்கு ஆகிய மாவட்ட வேட்பாளர்கள் இடம் பெற்றுள்ளனர்.9-ம் கட்ட வேட்பாளர் பட்டியலில் மதுரை தெற்கு, தென்காசி வடக்கு, கோவை கிழக்கு, கோவை மேற்கு, கோவை தெற்கு, திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி, கொரடாச்சேரி, நன்னிலம், வலங்கைமான், நீடாமங்கலம் ஆகிய வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.10-வது கட்ட வேட்பாளர் பட்டியலில் நாகை தெற்கு, நாகை வடக்கு, புதுக்கோட்டை வடக்கு, கோவை தெற்கு, இராமநாதபுரம் மாவட்டம், கன்னியாகுமரி கிழக்கு மாவட்டம், திண்டுக்கல் கிழக்கு, தேனி தெற்கு, அாியலூர் மாவட்டம் ஆகிய இடங்களில் போட்டியிடுவதற்கான வேட்பாளர் பட்டியல் இடம் பெற்றுள்ளனர்.இதற்கான அறிவிப்பை கட்சியின் பொதுச் செயலாளா் துரைமுருகன், புதன்கிழமை வெளியிட்டாா். மீதமுள்ள மாவட்டங்களில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் பட்டியல் பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான 10-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது….

Related posts

ஒயிட்ஸ் சாலை துர்கை அம்மன் கோயிலை இடிக்கவில்லை ராஜகோபுரத்தை நவீன தொழில்நுட்ப உதவியுடன் 10 அடி நகர்த்த திட்டம்: உயர் நீதிமன்றத்தில் மெட்ரோ ரயில் நிர்வாகம் தகவல்

மாநகர போக்குவரத்து கழக பணியாளர்கள் மற்றும் டிரைவர், கண்டக்டர்களுக்கு பயோமெட்ரிக் வருகை பதிவு : மேலாண் இயக்குநர் அதிரடி உத்தரவு

திருத்தணியில் ஆடி கிருத்திகை முன்னேற்பாடு தொடக்கம்