நகராட்சிக்குட்பட்ட வார்டுகளில் பாதாள சாக்கடை பணியால் ஏற்படும் இடையூறுகளை தவிர்க்க நடவடிக்கை-அதிகாரிகள் தகவல்

பொள்ளாச்சி : பொள்ளாச்சி நகராட்சிக்குட்பட்ட 36 வார்டுகளிலும், குடியிருப்பு பகுதி மற்றும் வணிக வளாகங்களிலிருந்து வெளியேறும் கழிவு நீரை ஒருங்கே இணைத்து கொண்டு செல்லும் நடவடிக்கைக்காக, கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் சுமார் ரூ.120 கோடியில் பாதாள சாக்கடை பணி துவங்கப்பட்டது. தற்போது 95 சதவீத பணிகள் நிறைவடைந்த நிலையில், வீடு மற்றும் வணிக வளாகங்களிலிருந்து வெளியேறும் கழிவுநீரை அப்புறப்படுத்த, இணைப்பு ஏற்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. பாதாளா சாக்கடை நிறைவடைந்த அனைத்து பகுதியிலும் புதிய சாலை பணி பெரும்பாலும் நிறைவடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால், சில வார்டுகளில் பாதாளா சாக்கடை பணியை முறையாக மேற்கொள்ளாமல் விட்டுள்ளதால், ஆளிறங்கும் குழி வழியாக கழிவுநீர் வெளியேறுவதும், மழை காலத்தில் மழை நீருடன் கழிவுநீர்  அதிகளவு வெளியேறுவது அப்பகுதி மக்களிடையே வேதனையை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக, அந்தந்த வார்டு பொதுமக்கள் மட்டுமின்றி, கவுன்சிலர்களும் நகராட்சி அதிகாரிகளிடம் புகார் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, பாதாள சாக்கடை பணி நிறைவடைந்தாலும், கழிவுநீரை சீராக கொண்டு செல்வதற்கான நடவடிக்கை எடுப்பதற்கான முயற்சிக்காக, நகர்மன்ற தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன், ஒவ்வொரு வார்டு வரியாக ஆய்வு மேற்கொண்டனர். இது தொடர்பாக, உயர் அதிகாரிகளிடம் எடுத்துரைத்து, பொதுமக்களுக்கு எந்தவித இடையூறு இல்லாத வகையில் நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளார். இந்நிலையில் நேற்று, நகராட்சிக்குட்பட்ட பகுதியில் பாதாள சாக்கடை பணியை முறையாக மேற்கொள்வது குறித்து, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளுடனான கலந்தாலோசனை கூட்டம், நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இதற்கு, ஆணையாளர் தாணுமூர்த்தி தலைமை தாங்கினார். நகர்மன்ற துணை தலைவர் கவுதமன், கவுன்சிலர்கள் தங்கவேல், சண்முகபிரியா சதீஸ், இளமாறன் மற்றும் நகராட்சி அதிகாரிகள், குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். அப்போது கவுன்சிலர்கள் கூறுகையில், ‘பாதாள சாக்கடை பணியை முழுமையடைந்துள்ளது என கூறப்பட்டாலும், இன்னும் சில இடங்களில் கழிவுநீர் சீராக செல்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளாமல் இருப்பதால், அப்பகுதி மக்கள் அவதிப்படுகின்றனர். அவர்கள் தெரிவிக்கும் குறைகளை நிவர்த்தி செய்யாமல் இருக்க முடியாது. எனவே, இதற்கு நிரந்த தீர்வு காண குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள், நேரடியாகவே ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர். நகராட்சி அதிகாரிகள் கூறுகையில், ‘பொள்ளாச்சி நகராட்சிக்குட்பட்ட பகுதியில், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் மேற்கொள்ளப்படும் பாதாள சாக்கடை பணி நிறைவடைந்த நிலையில் இருந்தாலும், இன்னும் சில வார்டுகளில் குறையுள்ளது. அதனை நிவர்த்தி செய்ய குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளிடம் எடுத்துரைக்கப்பட்டுள்ளது. அவர்கள், விரைந்து சீர்படுத்துவதற்கான நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளனர்.  பாதாள சக்கடை வழியாக வரும் கழிவுநீரை சுதிகரிப்பு செய்ய இரண்ட இடங்களில் மெகா சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. 13 பம்பிங் நிலையமும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. பாதாளா சாக்கடை நிறைவடைந்த நிலையில், இன்னும் 5 ஆண்டுகளுக்கு பரமரிப்பு மேற்கொள்ளப்படுகிறது. அதன் பிறகே நகராட்சியிடம் ஒப்படைக்கப்படும். அந்த  5 ஆண்டுகளுக்குள் பாதாள சாக்கடை பணியில் எந்தவித தொய்வு இல்லாத வகையில் இருக்க கண்காணிக்கப்படுகிறது’ என்றனர்….

Related posts

போலீசார், தொழிலதிபர் என 20 பேரை ஏமாற்றி திருமணம்: கல்யாண ராணி சிக்கினார்

ரூ.822 கோடி குத்தகை பாக்கி ஊட்டி குதிரை பந்தய மைதானத்திற்கு சீல்

திருச்சியில் வாலிபர் வெட்டி கொலை தப்பிய ரவுடியை சுட்டு பிடித்த போலீஸ்