நகரங்களின் வாழ்க்கை தர பட்டியலில் சென்னை மாநகரம் முதன்மை நிலையை அடைய பொதுமக்களுக்கு அழைப்பு: மாநகராட்சி வேண்டுகோள்

சென்னை: நகரங்களின் வாழ்க்கை தரப் பட்டியலில் சென்னை முதன்மை நிலையை அடைய பொதுமக்களுக்கு சென்னை மாநகராட்சி அழைப்பு விடுத்துள்ளது. இதுகுறித்து, சென்னை மாநகராட்சி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:சென்னை மாநகராட்சி மற்றும் ஸ்மார்ட் சிட்டி நிறுவனம், சென்னையின் வாழ்க்கைச் சூழல் மதிப்பாய்வில் பொதுமக்கள் பங்கேற்க அழைக்கின்றது. நாட்டின் பிற நகரங்களுடன் ஒப்பிட்டு சென்னைக்கு மதிப்பீடு வழங்கி, இந்திய நகரங்களின் வாழ்க்கை தரப்பட்டியலில் சென்னையை முதன்மை நிலையை அடைய அழைப்பு விடுக்கிறது. பொதுமக்கள் மதிப்பாய்வு என்பது எளிதான வாழ்க்கைச் சூழல் கணக்கீட்டின் ஒரு பகுதியாகும். இதன் மூலம் நகரத்தின் வாழ்க்கைத் தரத்தை பற்றிய பொதுமக்களின் கருத்தை நேரடியாக தெரிந்து கொள்ள முடியும். இந்த ஆய்வு, சென்னை மாநகராட்சிக்கு பொதுமக்களின் கருத்தைப் புரிந்து கொள்ளவும், நகரில் சேவை வழங்குதல் மற்றும் நிர்வாகத்தை மேம்படுத்தவும் உதவும். இந்த மதிப்பாய்வில் பங்குகொள்ள https://eol2022.org%CitizenFeedback என்ற இணைப்பை பயன்படுத்தவும். வாழ்க்கைத் தரம் மற்றும் நகர்ப்புற வளர்ச்சியில் பல்வேறு முன் முயற்சிகளின் தாக்கம் ஆகியவற்றை மதிப்பீடு செய்வதே எளிதான வாழ்க்கைச் சூழல் மதிப்பாய்வின் நோக்கமாகும். வாழ்க்கைத் தரம், பொருளாதார வாய்ப்புகள், நிலைத்தன்மை மற்றும் எதில் எதில் பின்னடைவு ஆகியவற்றை மாநகராட்சி அறிந்து கொள்ள உதவும். இந்த கணக்கெடுப்பு தமிழ்நாடு அரசு மற்றும் சென்னை மாநகராட்சிக்கு தற்போதைய திட்ட இடைவெளிகளைப் புரிந்து கொள்ளவும், சென்னையில் சேவை வழங்குதல் மற்றும் நிர்வாகத்தை மேம்படுத்தவும் உதவும். பொதுமக்கள் இந்த மதிப்பாய்வில் பங்கேற்பது எளிதான வாழ்க்கைச் சூழல் கணக்கீட்டில் 30 சதவீத மதிப்பீட்டைக் பெற்றுத் தர உதவும். 2022 தேசிய தரவரிசைகளில் சென்னையை கணக்கிடுவதில் இது முக்கியமான பங்கு வகிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் கலந்துகொள்வதற்கு இன்னும் 10 நாட்களே உள்ளது. வரும் 23ம்தேதிக்குள் இந்த மதிப்பாய்வில் பொதுமக்கள் கலந்துகொண்டு சான்றிதழை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது….

Related posts

விளையாட்டு மைதானத்தில் குப்பை, கட்டிட கழிவு கொட்டுவதற்கு எதிர்ப்பு: இளைஞர்கள் சாலை மறியல்

ஊராட்சி தலைவர் வீட்டில் கல்வீச்சு 20 பேர் மீது வழக்கு

பிளஸ் 2 படித்துவிட்டு கிளினிக் நடத்தி வந்த போலி டாக்டர் கைது: சுகாதாரத்துறை நடவடிக்கை