தோஷத்தை விலக்குவோம்

பொதுவாகவே நம் எல்லோருக்கும் எதாவது ஒரு தோஷம் இருக்கும். உதாரணமாக நம் உடல் நிலையில் ஜலதோஷம் ஏற்பட்டால் நம்  உடல் நிலைக்கு தகுந்தாற்போல் மருந்தை அருந்தி ஜலதோஷத்தை போக்குகிறோம். அதுபோல் நம் வாழ்க்கையில் ஏற்படும் தோஷத்தை போக்குவதற்கு தோஷ பரிகாராஷ்டகம் என்னும் மந்திரங்கள் உள்ளன. அந்த மந்திரத்தை நாள்தோறும் நாம் மன உறுதியுடன் சொன்னால் நமக்குள் இருக்கக்கூடிய தோஷம் விலகி நன்மை அளிக்கிறது. ஆன்மீக பலன் வாசகர்கள் வேண்டுகோளுக்கு இனங்க தோஷ பரிகாராஷ்டகம் மந்திரத்துடன் அதன் விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.தோஷபரிஹாராஷ்டகம்அத்யஸ்ய தோஷகணநா குதுகம் மமைததாவி கரோதிமதியதம் மயி தோஷவத்வம் தோஷ: புநர் மயி நசேதகிலே ஸதீசே தோஷக்ரஹ: கதமுநேது மமேச தஸ்மிந்ஈசனே! பிறருடைய குற்றங்களைக் கணக்கிடுவதில் எனக்கும் ஆவல். என்னிடமிருக்கும் தோஷத்தையே வெளியாக்குகிறது. ஏனெனில் என்னிடத்தில் அவ்வித தோஷமில்லையானால் சகலமும் ஈச்வர ஸ்வரூபமாக இருக்கையில் அவனிடத்தில் நான் எவ்வித  குற்றத்தைக் காணமுடியும்?ஏஷா வ்யதேதரக்ருதேதி மமோ தஸ்மித்கோபோ யதி ஸ்வபரகரமமுகப்ரஸூதாஸேயம் வ்யதேதி மயி மே நகதம்து கோப:ஸ்வஸ்ப வ்யதா ஸ்வாதுரிதப்ரபவா ஹி ஸர்வாமரமேச்வர! எனக்கு இத்துன்பம் பிறரால் ஏற்பட்டது என்ற காரணத்தைக் கொண்டு அவனிடத்தில் கோபம் உண்டாகுமானால், தான் வேறு பிறர் வேறு என்ற வேற்றுமையின் மூலம் இத்துன்பமென என்னிடத்திலேயே எனக்கு ஏன் கோபமுண்டாகக் கூடாது? தனக்கு நேரிடும் துன்பமெல்லாம் தான் செய்த வினையின் பயனாகவே ஏற்படுகின்றன என்று நான் கருதுவேனானால் மனப்பக்குவம் அடைய மாட்டேனா?காமப்ர ப்ருத்யகில தோஷநிதேர்மமைஷமய்யாஹ தோஷமிதி கோ நு துராக்ரஹோ(அ)ஸ்மித்ஹேயத்வமாலதி யோ(அ)யமலம்ஹி கேந வார்யோ(அ)த ஸத்தவவதி ஸோ (அ) யமஸத் கிமாஹஆசை முதலான எல்லா தோஷங்களுக்கு இருப்பிடமான உன் விஷயத்தில் மற்றொருவன் குற்றம் கூறினான் என்ற கெடுதலான நினைவு எதற்கு? எவனொருவன் என்னிடம் குற்றம் கூறுகிறானோ அவனை யாரால் தடுக்க முடியும்? மேலும் அவன் உள்ளதை உரைத்தவன் அன்றோ! இல்லாததை என்ன கூறினான்? அதனால் நான் ேகாபப்படாமல் என்னைத் தடுத்துக் கொள்ள வேண்டும்.யஸ்ஸம்சரிதச ஸ்வஹித தீர் வ்யஸாநாது ரஸ் தத்-தோஷஸ்ய தம் ப்ரதி வசோ(அ)ஸ்து ததந்யதோஷம்யத் வச்மி தத்மம ந கிம் க்ஷதயே ஸ்வதோஷ-சிந்தைவ மே ததபநோத பலோசிதா(அ)த:தனக்கு நன்மையை விரும்பிக்கொண்டும் துன்பத்தால் வருத்திக் கொண்டும் எவன் தம்மை வந்து அடைந்தானோ, அவனிடம் தோஷத்தைச் சொல்வதோ காண்பதோ இருக்கட்டும்; பிறரிடம் தோஷங்கள் உள்ளன என்று எடுத்துக் காட்டி குறை கூறுவது எனது நாசத்திற்குக் காரணமல்லவா? ஆகவே அந்தத் தோஷங்களைப் போக்குவதையே பலமாகச் சிந்தித்துத் தன்னிடமுள்ள தோஷங்களைக் கரைப்பதே தகுந்ததாகும். (அதாவது என்னிடம் அந்த தோஷங்கள் வராமலும் இல்லாமலும் ஆக்க வேண்டும்)தோஷம் பரஸ்ய நது க்ருஹ்ணாதி மய்யநேநஸ்வாத்மைஷ ஏவ பரகாத்ர ஸமாஹ்ரதேந |துர்வஸ்துநேவ மலிநீக்ரியதே ததந்ய -தோஷக்ரஹாதஹஹ கிம் ந நிவர்த்திதவ்யம் ||நான் பிறருடைய தோஷத்தைக் காணும்போதும், சொல்லும் பொழுதும் பிறருடைய சரீரத்திலிருந்து வெளிவந்துள்ள தோஷத்தினால் என்னுடைய மனம் களங்கமுள்ளதாக ஆகிறது. அதனால் பிறரிடத்தில் தோஷத்தைக் காணாமலிருக்க வழிகாட்ட வேண்டாமா?நிதோஷ பாவமிதரஸ்ய ஸதோஷபாவம்ஸ்வஸ்யாபி ஸம்விததநீ பரதோஷ தீர் மே |ஆஸ்தாமியம் ததிதரா து பரார்திமாத்ர-ஹேதுர் வ்யநக்து ந கதம் மம துச்சபாவம் ||பிறரிடத்தில் உண்டாகின்ற தோஷ புத்தியைக் காண்பேனானால், நான் தோஷமுள்ளவன். பிறர் தோஷமற்றவர் என்ற எண்ணம் உண்டாகுமானால் நான் தன்யனாவேன். அதனால் பிறருடைய மன வருத்தத்திற்குக் காரணமாயுள்ள புத்தியானதோ சொற்களானதோ என்னுடைய அல்பத் தன்மையை வெளிப்படுத்தாமலிருக்க வழி காட்ட வேண்டாமா? அனுஷா…

Related posts

புதுக்கோட்டை புவனேஸ்வரி

காக்கும் கல்

கனவு இல்லத்துக்கு கைகொடுக்கும் இறைவன்