தோவாளை மலர் சந்தையில் பூக்களின் விலை கடும் வீழ்ச்சி

கன்னியாகுமாரி: கன்னியாகுமாரி மாவட்டம் தோவாளை மலர் சந்தையில் உச்சத்தில் இருந்து வந்த மல்லிகை மற்றும் பிச்சிப் பூக்களின் விலை வீழ்ச்சியடைந்துள்ளது. கன்னியாகுமாரி மாவட்டம் தோவாளை மலர் சந்தையில் கடந்த ஒரு மாத காலமாக பூக்களின் விலை உச்சத்தில் இருந்து வந்தது. இந்நிலையில் பூக்களின் விலை திடீரென வீழ்ச்சியடைந்துள்ளது. கடந்த மாதம் வரை ரூ. 4,000- க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ மல்லிகைப் பூ தற்போது ரூ.800 ஆக விற்கப்டுகிறது.ரூ. 2,500- க்கு விற்கப்பட்ட பிச்சிப் பூவின் விலை கிலோ ஒன்றிக்கு ரூ. 600 ஆகவும் குறைந்துள்ளது. விழாக்களும், முகூர்த்த நாட்களும் முடிந்ததாலேயே விலை குறைந்துள்ளதாக வணிகர்கள் தெரிவிக்கின்றனர். இதேபோல் தாமரை, அரளி, கேந்தி, துளசி, வாடா மல்லி என அனைத்து வகை பூக்களின் விலையும் குறைந்துள்ளது. வரும் நாட்களில் பொங்கல் பண்டிகை நெருங்கும் போது விலை மீண்டும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.    …

Related posts

சாலையில் தீப்பற்றி எரிந்த மாநகர பேருந்து: சென்னையில் பரபரப்பு

தமிழகத்தில் ஜூலை 9 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

3 குற்றவியல் சட்டங்களை எதிர்த்த வழக்கில் ஜூலை 23-க்குள் பதிலளிக்க ஒன்றிய அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு