தோட்டத் தொழிலாளர் தொழிற் பயிற்சி மாணவர்களுக்கு தொழில் வாய்ப்பு நேர்காணல்

கூடலூர், ஏப். 11: கூடலூர் தேவர்சோலை சாலையில் இயங்கி வரும் தோட்டத் தொழிலாளர் தொழிற் பயிற்சி மையத்தில் நேற்று கோவை மாவட்டம், அவினாசி சாலையில் இயங்கி வரும் பிரீமியர் மில் தனியார் தொழிற்சாலையின் மனித வள மேம்பாட்டு அதிகாரி ஜெயதிலகன் மற்றும் மின் பொறியாளர் கனகவேல் ஆகியோர் பயிற்சி நிலையத்தின் இறுதியாண்டு பிட்டர், வயர்மேன் மற்றும் எலக்ட்ரிசியன் பிரிவு மாணவர்களுக்கு நேர்காணல் நடத்தினர். பயிற்சி மைய முதல்வர் ஷாஜி எம் ஜார்ஜ் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆசிரியர் செல்வகுமார் வரவேற்று பேசினார். மனித வள மேம்பாட்டு அதிகாரி ஜெயதிலகன் வேலைவாய்ப்பு குறித்து விளக்கம் அளித்தார்.

இந்த நேர்காணலில் பயிற்சி நிலையத்தில் பயிலும் பொருத்துநர், மின்கம்பியாளர் மற்றும் எலக்ட்ரிகல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் டெக்னிஷியன் பிரிவுகளிலுள்ள 42 பயிற்சியாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கு இரண்டு ஆண்டு பயிற்சி காலத்தில் ஊக்கத்தொகை மற்றும்உணவு மற்றும் தங்குமிடம் இலவசமாக அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. முடிவில் ஆசிரியை அம்மினி நன்றி கூறினார்.

Related posts

சாத்தூரில் இன்று மின்தடை

திமுக ஆலோசனை கூட்டம்

சத்துணவு அமைப்பாளர்களுக்கு பயிற்சி