தோகைமலை அருகே மது விற்ற பெண் உள்பட இருவர் கைது

தோகைமலை, மார்ச் 30: கரூர் மாவட்டம் தோகைமலை காவல் சரகம் பண்ணப்பட்டி ஊராட்சி பி.உடையாபட்டி அரசு மதுபானக்கடை அருகே, புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் சாத்தங்குடி ஜெயம் மகன் வினோத் (30). என்பவர் மதுபானங்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து உள்ளார். இதேபோல் கொசூர் ஊராட்சி கொத்தமல்லிமேடு சுப்பன் மனைவி மாணிக்கம்மாள் ( 45). இவர் அதே பகுதியில் உள்ள தனது வீட்டின் பின்புறத்தில் மதுபானங்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து உள்ளார்.

இதுகுறித்து தகவல் அறிந்த தோகைமலை போலீசார் அந்த பகுதிகளை ஆய்வு செய்தனர். அப்போது வினோத் மற்றும் மாணிக்கம்மாள் ஆகியோர் விற்பனை செய்வதற்காக வைத்திருந்த மதுபானங்களை பறிமுதல் செய்து இருவரையும் கைது செய்தனர்.

Related posts

கத்தியை காட்டி மிரட்டி செல்போன் பறித்தவர் மீது பாய்ந்தது ‘குண்டாஸ்’ வழக்கு

ரங்கம் பூ மார்க்கெட்டுக்கு வந்த மினிலாரி கவிழ்ந்து ஆட்டோ, டூவீலர் சேதம்

திருச்சியில் இருந்து கரூர் வரை செல்லும் ராணி மங்கம்மாள் சாலை 4 வழியாக மாற்றம்: விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டத்தில் வலியுறுத்தல்