தோகைமலை அருகே மக்கள் பயன்படுத்தும் பாதையை தடுத்தவர் மீது வழக்குப்பதிவு

தோகைமலை, ஆக. 27: தோகைமலை அருகே தொண்டமாங்கிணம் ஊராட்சி கவுண்டம்பட்டியில் பொதுமக்கள் பயன்படுத்தும் வழியில் தடுப்புகள் அமைத்த நபர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரணை
மேற்கொண்டு வருகின்றனர். கரூர் மாவட்டம் தோகைமலை அருகே தொண்டமாங்கிணம் ஊராட்சி கவுண்டம்பட்டியை சேர்ந்தவர் கிருஷ்ணன் 55. இவர் விவசாயி கூலி வேலை செய்து வருகிறார். இவர் கவுண்டம்பட்டியில் உள்ள காத்தான் தெரு, சோப்பளான் தெரு மற்றும் கொம்புக்காரன் தெருவிற்கு செல்லும் வழியை மறித்து தடுப்பு அமைத்துள்ளார்.

தகவல் அறிந்த கடவூர் தாசில்தார் முனிராஜ் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டார். பின் கவுண்டம்பட்டியில் உள்ள பொது பாதையில் தடுப்பு அமைத்து இருந்த கிருஷ்ணனை அழைத்து, பொது பாதையில் உள்ள தடுப்புகளை அப்புறப்படுத்த வேண்டும் என்று பேச்சுவார்த்தையின் போது ெதரிவித்து உள்ளார். இதில் கவுண்டம்பட்டியில் உள்ள பொது பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை எடுக்க வேண்டும். இல்லை என்றால் நான் அமைத்திருக்கும் தடுப்புகளை எடுக்கமுடியாது என்று கிருஷ்ணன், தாசில்தார் முனிராஜிவை மிரட்டியதாக தெரிகிறது. இதுகுறித்து கடவூர் தாசில்தார் முனிராஜ் தோகைமலை காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன்பேரில் கிருஷ்ணன் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

ஆசிரியர்கள் கலந்தாய்வுக்கு எதிராக நடத்தும் போராட்டத்தில் பங்கேற்க மாட்டோம் பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு அறிவிப்பு

கஞ்சா விற்றவர் கைது

முப்பெரும் சட்டங்களை அமல்படுத்த எதிர்ப்பு திருச்சியில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்