தொழில் நிறுவனங்களை ஈர்க்கும் மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது: வேலையளிப்போர் கூட்டமைப்பு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை..!!

சென்னை: தென்னிந்திய வேலையளிப்போர் கூட்டமைப்பின் நூற்றாண்டு நிறைவு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், திராவிட இயக்கத்தின் தாய் அமைப்பான நீதிக்கட்சி முதல்முதலாக ஆட்சி அமைத்தது 1920ம் ஆண்டு. நீதிக்கட்சி ஆட்சிக்கு வந்தபின்பே தமிழ்நாட்டில் தொழில் நிறுவனங்கள் வர தொடங்கின. தொழில் வளர்ச்சிக்காக சவுத் இண்டியன் டிரேட் ஜெனரல் என்ற இதழை தியாகராயர் தொடங்கினார். தூத்துக்குடியில் இருந்து ஹார்வி ஆலையில் 1905ம் ஆண்டு வ.உ.சிதம்பரனார் தொழிற்சங்கத்தை உருவாக்கினார். தொழிலை மட்டும் அல்ல தொழிலாளர்களையும் வளர்க்கும் கடமை வேலையளிப்போர் கூட்டமைப்புக்கு உள்ளது. பல்வேறு துறைகளில் தமிழ்நாடுதான் முன்னணி மாநிலம். ஆங்கிலேயர் அதிகப்படியான தொழிற்சாலைகளை உருவாக்கியது தமிழ்நாட்டில் தான். அனைத்து துறைகளிலும் வளர்ச்சி என்பது தான் திராவிட மாடல். பல துறைகளில் இந்தியாவுக்கே தமிழ்நாடுதான் முன்னோடியாக உள்ளது என கூறினார். தொடர்ந்து பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், தொழிலாளர் ஓய்வு இல்ல பராமரிப்புக்காக ரூ.7.5 கோடி நிதியை தமிழ்நாடு அரசு ஒதுக்கியுள்ளது. தமிழ்நாட்டில் 15 மாதங்களில் புதிய தொழில்கள் தொடங்கப்பட்டுள்ளன. தொழில்துறை இயக்கம் என்பது இங்கு தான் முதன் முதலில் உருவானது. தொழில் நிறுவனங்களை ஈர்க்கும் மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது. பல்வேறு மாநிலங்கள், பல்வேறு நாடுகளில் இருந்து வந்து தமிழ்நாட்டில் தொழில் தொடங்குகிறார்கள் என்று குறிப்பிட்டார்….

Related posts

மாநில கல்லூரியில் ரூ.21 கோடி மதிப்பீட்டில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு லிப்ட் வசதியுடன் பிரத்யேக விடுதி: விரைவில் பயன்பாட்டிற்கு வருகிறது

சென்னையில் வடகிழக்கு பருவ மழையின்போது மீட்பு பணிகளில் ஈடுபட 10,000 பேருக்கு பயிற்சி: பேரிடர் மேலாண்மை துறை திட்டம்

தூய்மை பணியாளர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம்: இ.கருணாநிதி எம்எல்ஏ தொடங்கி வைத்தார்