தொழில் ஆலோசகர், சமூக அலுவலர் பதவிக்கான தேர்வு ஹால் டிக்கெட் இணையதளத்தில் வெளியீடு: டிஎன்பிஎஸ்சி தகவல்

சென்னை: மருத்துவ கல்வித்துறையில் தொழில் ஆலோசகர், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தில் சமூக அலுவலர் பதவி தேர்வுக்கான ஹால் டிக்கெட் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் கிரண் குராலா நேற்று வெளியிட்ட அறிவிப்பு: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தமிழ்நாடு மருத்துவ பணிகளில் அடங்கிய தொழில் ஆலோசகர் (மருத்துவ கல்வித்துறை) மற்றும் தமிழ்நாடு குடிசை பகுதி மாற்று வாரிய சமூக மேம்பாட்டு பணியில் அடங்கிய சமூக அலுவலர் (தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம்) பதவிக்கான கணினி வழித் தேர்வு வருகிற 12ம் தேதி முற்பகல் மற்றும் பிற்பகல், 13ம் தேதி சென்னை மாவட்ட தேர்வு மையத்தில் நடைபெற உள்ளது. தேர்வு எழுத அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களிள் தேர்வுக்கூட அனுமதி சீட்டுகள் (ஹால்டிக்கெட்) தேர்வாணையத்தின் இணைய தளங்களான www.tnpsc.gov.in, www.tnpscexams.in ஆகியவற்றில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. விண்ணப்பதாரர்கள் தங்களுடைய ஒருமுறை பதிவேற்றம் மூலமாக மட்டுமே விண்ணப்ப எண், பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளீடு செய்து தேர்வுக்கூட அனுமதி சீட்டினை பதிவிறக்கம் செய்ய முடியும்….

Related posts

பெண்ணிடம் ₹2.50 லட்சம் மோசடி விவகாரம் வடசென்னை மாவட்ட பாஜ செயலாளர் கைது: தனிப்படை போலீசார் அதிரடி

சென்னையில் கடந்த 3 ஆண்டுகளில் சாலைகளில் சுற்றித்திரிந்த 6,876 ஆதரவற்றோர் மீட்பு

பழவேற்காடு – காட்டுப்பள்ளி இடையே உள்ள சாலையில் மீண்டும் கடல் சீற்றத்தால் மணல் திட்டுகள்:  வாகன ஓட்டிகள் அவதி  பாலம் அமைத்து தர கோரிக்கை