தொழிலாளியை யானை தாக்கியது

ஓசூர், நவ.17: ஓசூர் அருகே கெலமங்கலம் விருப்பாச்சி நகரைச் சேர்ந்தவர் சாக்கப்பா (45). இவரது மனைவி திம்மக்கா. சாக்கப்பா சினிகிரிபள்ளி பகுதியில், நேற்று கூலி வேலைக்கு சென்றிருந்தார். வேலை முடித்து வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். சின்னகிரிபள்ளி பகுதியில் வந்தபோது, திடீரென வந்த ஒற்றை யானை அவரை தூக்கி வீசியதில் அவரது வலது கால் முறிந்தது. இது குறித்து அப்பகுதி மக்கள் வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர். வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, அவரை மீட்டு ஓசூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர், மேல்சிகிச்சைக்காக பெங்களூருவுக்கு கொண்டு சென்றனர். சானமாவு வனப்பகுதியில் மேலும் 5 யானைகள் சுற்றி திரிவதால், கிராம மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Related posts

தி.நகர் சட்டமன்ற தொகுதியில் குடிநீர் பிரச்னைக்கு விரைவில் தீர்வு: ஜெ.கருணாநிதி எம்எல்ஏ கேள்விக்கு அமைச்சர் கே.என்.நேரு பதில்

தனிநபருக்கு எத்தனை பாட்டில் விற்கலாம்? மது விற்பனைக்கு விதிமுறை பணியாளர்கள் கோரிக்கை

இன்று காலை 6-9 மணி வரை அண்ணாநகர் பகுதியில் போக்குவரத்து மாற்றம்: காவல் துறை அறிவிப்பு