தொழிலாளியை பாட்டிலால் குத்தியவர் கைது

 

கோவை, ஆக. 17: கோவையில் மது குடிக்க பணம் கேட்டு தொழிலாளியை பீர் பாட்டிலால் குத்திய ஓட்டல் ஊழியரை போலீசார் கைது செய்தனர். கோவை தெற்கு உக்கடம் புல்லுக்காடு ஹவுசிங் யூனிட்டை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (33). கட்டிட தொழிலாளி. இவர், நேற்று முன்தினம் லங்கா கார்னர் அருகே உள்ள டாஸ்மாக் கடையில் மது வாங்க நின்றிருந்தார். அப்போது அங்கு வந்த வாலிபர் ஒருவர் பாலகிருஷ்ணனிடம் மது வாங்க பணம் கேட்டு மிரட்டினார். அவர் கொடுக்க மறுத்ததால் ஆத்திரமடைந்த அந்த வாலிபர் பீர் பாட்டிலால் பாலகிருஷ்ணனை குத்தினார்.

இதில் அவருக்கு தலையில் காயம் ஏற்பட்டது. வலியால் துடித்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து பாலகிருஷ்ணன் ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.  அதில், பாலகிருஷ்ணனை பீர்பாட்டிலால் குத்தியது சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த கோவையில் பிளாட்பாரத்தில் தங்கி ஓட்டலில் சப்ளையராக வேலை பார்க்கும் செந்தில் (36) என்பது தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்தனர்.

Related posts

திருச்சி மாவட்டத்திற்கு சட்டசபையில் அறிவிக்கப்பட்ட மருத்துவக்கல்லூரி அரங்கம் மட்டுமே தரம் குறைவு

குழந்தைகளுடன் இளம்பெண் மாயம்

திருவெறும்பூர் அருகே தனியார் கம்பெனியில் இரும்பு திருடியவர் கைது