தொழிற்சாலை வேன் கவிழ்ந்து விபத்து பெண் பலி: 20 பேர் படுகாயம்

ஸ்ரீபெரும்புதூர்: திருவள்ளூர் அருகே தனியார் தொழிற்சாலை வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில்  21 பெண்கள் காயமடைந்தனர். அவர்களை திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அரக்கோணத்தை சேர்ந்த பெண் ஒருவர் உயிரிழந்தார்.  திருவள்ளூர் அடுத்த தொடுகாடு ஊராட்சி, நமச்சிவாயபுரத்தில் குட்லெதர் ஷூஸ் என்ற தனியார் தொழிற்சாலை இயங்கி வருகிறது. ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இங்கு பணிபுரிந்து வருகின்றனர்.  இந்நிலையில் நேற்றுமுன்தினம் மாலை இக்கம்பெனியில் பணிபுரியும் பெண்கள், வேலை முடிந்து வீட்டிற்கு தொழிற்சாலை வேனில் சென்று கொண்டிருந்தனர். தொழிற்சாலை வேனை ரஞ்சித் என்பவர் ஓட்டி சென்றார். அப்போது தக்கோலம் அடுத்த பிச்சிவாக்கம் செக்போஸ்ட் அருகே சென்றபோது  எதிரே வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதாமல் இருப்பதற்காக வேனை ஓட்டி வந்தவர் திருப்பியபோது, வேன் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதனால் வேனில் பயணம் செய்த 21 பெண்களுக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சைக்காக சேர்த்தனர். இதில் சிகிச்சை பலனின்றி அரக்கோணம் அடுத்த மின்னல் கிராமத்தைச் சேர்ந்த லட்சுமி என்பவர் உயிரிழந்தார். இந்த விபத்தில் ஜெயரஞ்சனி, கோமதி, மாலா உள்ளிட்ட 20 பேரும் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் முதல் சிகிச்சைப்பெற்று மேல் சிகிச்சைக்காக  சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு  அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து சுங்குவார்சத்திரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்….

Related posts

தேவை அதிகரிப்பதால் தோழி விடுதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்

தஞ்சாவூர்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ரூ.22 கோடி மதிப்புடைய 6 சாமி சிலைகளை மீட்பு: சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் நடவடிக்கை

வயலூர் கிராமத்தில் 1000 ஆண்டு பழமையான அம்மன் கோயில்களில் மகா கும்பாபிஷேகம்