தொழிற்சாலையை மக்கள் முற்றுகை

 

கடலூர், ஆக. 13: கடலூர் துறைமுகம் பகுதியில் தனியார் மீன் எண்ணெய் தயாரிப்பு கம்பெனியை முற்றுகையிட்டு அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.  கடலூர், துறைமுகம் தைக்கால்தோணித்துறையில் மீன்களை கொண்டு மீன் எண்ணெய் மற்றும் கோழி தீவனம் தயாரிக்கும் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இக்கம்பெனியில் இருந்து துர்நாற்றம் வீசுவதாகவும், தொழிற்சாலையை மூட வேண்டும் என தொடர்ந்து அப்பகுதி மக்கள் மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல் துறையிடம் புகார் கொடுத்தும் நடவடிக்கைகள் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

தொடர்ந்து சுற்றுச்சூழல் பாதிப்பு மற்றும் பகுதி மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் சம்பந்தப்பட்ட நிறுவனம் செயல்பட்டு வந்த நிலையில் பாதிப்புக்கு உள்ளான மக்கள் நேற்றிரவு 7 மணிக்கு 200க்கும் மேற்பட்டோர் தனியார் மீன் எண்ணெய் தயாரிப்பு தொழிற்சாலையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. தகவலறிந்த கடலூர், துறைமுகம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இருப்பினும் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் நள்ளிரவு வரை போராட்டம் நீடித்தது.

Related posts

சட்டப்பேரவை குழு விருதுநகரில் இன்று ஆய்வு

நரிக்குடி அருகே ரேஷன் பொருட்கள் வாங்க கண்மாய் நீரை கடந்து செல்லும் கிராமமக்கள்: ஊரில் புதிய கடை திறக்கப்படுமா?

சிவகாசியில் மாநில அளவிலான கராத்தே போட்டி