தொழிற்சாலையில் தீவிபத்து

பெரம்பூர்: சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையை சேர்ந்தவர் ராஜேஷ் ஜெயின் (50). கொடுங்கையூர் ஜம்புலி தெருவில் ஸ்டீல் தொழிற்சாலை நடத்தி வருகிறார். இங்கு, 50க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலை செய்து வருகின்றனர். இந்த தொழிற்சாலையில் அலுமினிய குக்கர், ஸ்டீல் பாத்திரங்கள் உள்ளிட்ட பொருட்கள் தயாரிக்கப்பட்டு பல்வேறு பகுதிகளுக்கு சப்ளை செய்யப்படுகிறது. நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் ஊழியர்கள் தொழிற்சாலையை மூடிவிட்டு சென்றனர். இந்நிலையில், நேற்று அதிகாலை 5 மணிக்கு தொழிற்சாலையில் இருந்து கரும்புகை வெளியேறியது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் உடனே கொடுங்கையூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், கொருக்குப்பேட்டை, உயர் நீதிமன்றம், ஆர்.கே.நகர், வியாசர்பாடி ஆகிய இடங்களில் இருந்து 6 தீயணைப்பு வாகனங்களில் விரைந்து வந்த வீரர்கள், 3 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். ஆனால், அதற்குள் தொழிற்சாலையில் இருந்த பொருட்கள் எரிந்து நாசமான…

Related posts

உலக தரத்தில் பல்வேறு நவீன வசதிகளுடன் தாம்பரம் ரயில் நிலைய வளாகம் ₹1000 ேகாடியில் மறுசீரமைப்பு: தெற்கு ரயில்வே அறிவிப்பு

வரத்து குறைவு காரணமாக கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறிகள் விலை உயர்வு

மெட்ரோ ரயில் பணி காரணமாக 2 நாட்கள் மடிப்பாக்கம் பகுதியில் போக்குவரத்து மாற்றம்: காவல்துறை அறிவிப்பு