தொழிற்சாலைகள் ஏற்படும் தீயில் இருந்து தப்பிப்பது எப்படி?மேட்டுப்பாளையத்தில் பெண்களுக்கு செயல் விளக்கம்

மேட்டுப்பாளையம் :  தனியார் தொழிற்சாலைகளில் பணிபுரியும் பெண்கள் பேரிடர் காலங்களில் தங்களை தற்காத்துக் கொள்வது எப்படி? என்று மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் ஒத்திகை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் தனியார் தொழிற்சாலைகளில் பணிபுரியும் பெண்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர்.மேட்டுப்பாளையத்தில் ஏராளமான தனியார் தொழிற்சாலைகள் உள்ளன. இங்கு அதிக அளவில் பெண்கள் பணிபுரிந்து வருகிறார்கள். இந்த நிலையில் தொழிற்சாலைகளில் ஏற்படக்கூடிய திடீர் தீ விபத்து கண்டறிவது எப்படி? தீ விபத்தில் யாராவது சிக்கிக்கொண்டால் எவ்வாறு தங்களை தற்காத்து கொள்ளவது? தீ மேலும் பராவாமல் உடமைகளை எவ்வாறு பாதுகாப்பதுட? போன்றவைகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. குறிப்பாக தொழிற்சாலைகளில் தீ விபத்து ஏற்படும்போது எந்தெந்த உபகரணங்களை எப்படி பயன்படுத்துவது? என்பது குறித்தும் செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.  சுற்றுலா செல்லும்போது ஆறு, குளங்களில் சிக்கிக்கொண்டால் கையில் இருக்கக்கூடிய பொருட்களை பயன்படுத்தி தண்ணீரில் இருந்து தப்பிப்பது எப்படி? என்பது பற்றியும் தீயணைப்பு துறையினர் செய்து காண்பித்தனர். மேலும் கட்டிடங்கள் இடிந்து விழுந்து சிக்கிக்கொண்டு உயிருக்கு போராடுபவர்களை எவ்வாறு தீயணைப்பு துறையினர் எவ்வாறு உயிருடன் மீட்கிறார்கள்? என்பது குறித்தும் மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் செயல் விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது. வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தண்ணீரில் சிக்கி உயிருக்கு போராடுபவர்களை  மீட்பது, 108 அவசரகால ஊர்தியை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்வது, விபத்தில் சிக்கி  உயிருக்கு போராடுபவர்களை 108 உள்ள ஊழியர்கள் எவ்வாறு முதலுதவி சிகிச்சை அளித்து பாதுகாக்கிறார்கள் என்பது குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் தொழிற்சாலைகளில் பணிபுரியும் பெண்கள், கல்லூரி மாணவர்கள் உட்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்….

Related posts

ஊழலுக்கு பொறுப்பேற்க வேண்டியவரை நீட் தேர்வு ஊழல் குறித்து விசாரிப்பவராக நியமித்திருப்பதே மோடி ஆட்சி லட்சணம்: செல்வப்பெருந்தகை கடும் தாக்கு

விளம்பரம் பார்த்தால் பணம் என நூதன மோசடி நீதிமன்றத்தில் சரணடைந்த நிதி நிறுவன உரிமையாளர்

ஏஐ தொழில்நுட்பம் மூலம் விஜயகாந்தை படங்களில் பயன்படுத்தாதீர்கள்: தேமுதிக வேண்டுகோள்