தொண்டு நிறுவனங்கள் பணியிடம் கூடுதல் ஆணையர் நிலைக்கு உயர்வு: அறநிலையத்துறை ஆணையர் உத்தரவு

சென்னை: அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன் வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:  அறநிலையத்துறை தலைமையிடத்தில் கூடுதல் ஆணையர் (திருப்பணி) பணியிடத்தினை இணை ஆணையர் நிலைக்கு இறக்கம் செய்தும், இணை ஆணையர் (கல்வி மற்றும் தொண்டு நிறுவனம்) பணியிடத்தினை கூடுதல் ஆணையர் நிலை உயர்வு செய்தும் அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளன.இணை ஆணையர் ஹரிப்பிரியாவுக்கு கூடுதல் ஆணையராக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. அவருக்கு கூடுதல் ஆணையர் (கல்வி, தொண்டு நிறுவனங்கள்) பணியிடத்தில் பணி நியமனம் செய்து ஆணையிடப்பட்டுள்ளது. அவர் தற்போது கவனித்து வரும் சென்னை-1 மண்டல இணை ஆணையர் பொறுப்புகளை தாமே கூடுதல் பொறுப்பை ஏற்றுக்கொண்டு, தலைமையிடத்தில் பதவி உயர்வில் நியமனம் செய்யப்பட்டுள்ளவாறு கூடுதல் ஆணையர் (கல்வி மற்றும் தொண்டு நிறுவனங்கள்) பணியிடத்தில் பணியில் சேரவும், இணை ஆணையர் வான்மதியை முழு கூடுதல் பொறுப்பில் இருந்து விடுவித்திவும் கேட்டுக்கொள்ளப்படுகிறார். கூடுதல் ஆணையர் (நிர்வாகம்) கண்ணன் நிலை இறக்கம் செய்யப்பட்டுள்ள இணை ஆணையர் (திருப்பணி) பணியிடத்தின் பொறுப்புகளை முழு கூடுதல் பொறுப்பில் ஏற்க கேட்டுக்கொள்ளப்படுகிறார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது….

Related posts

தமிழ்நாட்டை முன்னோடி மாநிலமாக மாற்ற இளைஞர்கள், தொழில் முனைவோர் பால் உற்பத்தியில் ஈடுபட வேண்டும்: பால் வளத்துறை அழைப்பு

புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து 10 ஆயிரம் போலீசாருக்கு பயிற்சி: கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் தகவல்

மெட்ரோ ரயில் பணி காரணமாக பெரம்பூர் மார்க்கெட் அருகே 2 நாள் போக்குவரத்து மாற்றம்