தொண்டி மணிமுத்து ஆறு பகுதியில் நீர்வளத்துறை அதிகாரிகள் ஆய்வு

 

தொண்டி, ஜூலை 27: தொண்டி மணிமுத்து ஆறுப் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகள் குறித்து நீர் வளத்துறை அதிகாரிகள் நேற்று ஆய்வு செய்தனர். தொண்டி பேருராட்சியில் உள்ள மணிமுத்து ஆறு நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது. மழை காலங்களில் திருவாடானை உள்ளிட்ட சுற்றுவட்டார கண்மாய்களிலிருந்து வெளியேறும் உபரி நீர், இந்த ஆற்றின் வழியாகத்தான் கடலுக்குச் செல்கிறது. இந்நிலையில் கடந்த சில வருடங்களாக, இப்பகுதியில் தொடர்ந்து ஆக்கிரமிப்புகள் அதிகரித்ததால் சில இடங்களில் ஆறு முற்றிலும் சாக்கடை கால்வாய் போன்று மாறிவிட்டது. இதனால் தண்ணீர் செல்ல வழியின்றி ஆங்காங்கே தேங்கி விடுகிறது.

மழைக் காலங்களில் அனீஸ் நகர், எம்.ஜி.ஆர் நகர் உள்ளிட்ட பகுதிகளை தண்ணீர் சூழ்ந்து விடுகிறது. இதனால் ஆக்கிரிமிப்புகளை அகற்றக்கோரி புகார்கள் எழுந்ததன. இதன் அடிப்படையில் இப்பகுதியில் நேற்று, நீர்வளத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, ஆற்றுப் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவும், தண்ணீர் தேங்காமல் சீராக செல்லவும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர். ஆய்வுப் பணியில் நீர் வளத்துறை உதவி செயற்பொறியாளர் ராஜேந்திரன், உதவிப் பொறியாளர் முத்தமிழரசன், சுகுமாரன், கணேஷ் உள்ளிட்ட அதிகாரிகள் ஈடுபட்டனர்.

Related posts

கும்பகோணத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

திருக்காட்டுப்பள்ளியில் மாபெரும் பெட்டிஷன் மேளா

அரசு பள்ளி மாணவர்கள் தூய்மை திருவிழா விழிப்புணர்வு பேரணி