தொண்டி பேரூராட்சியுடன் நம்புதாளை ஊராட்சியை இணைக்க மக்கள் எதிர்ப்பு

தொண்டி, டிச.19: தொண்டி பேரூராட்சியுடன் நம்புதாளை ஊராட்சியை இணைப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் அதிக மக்கள் தொகை கொண்ட ஊராட்சியில் நம்புதாளை ஊராட்சியும் ஒன்றாகும். இங்கு 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். 12 வார்டு உறுப்பினர்களையும், இரண்டு ரேசன் கடைகளையும் உள்ளடக்கிய பகுதியாகும். இங்கு பிரதான தொழிலாக மீன்பிடி தொழிலும், விவசாயமும் உள்ளது. ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் அதிகம் வசிக்கின்றனர்.

ஊராட்சியாக இருப்பதால் வரி உள்ளிட்டவைகளை சமாளிக்க முடிகிறது. பேரூராட்சியுடன் இணைத்தால் பல்வேறு சிரமம் ஏற்படுவதாக கூறி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். நம்புதாளை மீனவர் சங்க தலைவர் சத்தியேந்திரன் கூறியது, நம்புதாளை ஊராட்சியாக இருப்பதால் இப்பகுதி ஏழை மக்கள் பயன் பெரும் வகையில் நூறு நாள் வேலை திட்டம் உள்ளது. இது பேரூராட்சியுடன் இனைக்கும் போது இத்திட்டம் கைவிடப்படும். இதேபோல் வீட்டு வரி கூடும். தண்ணீர் கட்டணம் செலுத்த வேvண்டும், தெருவிளக்கு, குப்பை, சாக்கடை பிரச்னைகளை தொண்டி அலுவலகம் சென்று முறையிட வேண்டும்.

அதனால் ஏழை எளிய மக்களின் நலன் கருதி மாவட்ட நிர்வாகம் இத்திட்டத்தை கைவிட வேண்டும் என்றார். முன்னாள் கிராம தலைவர் குழந்தை நாதன் கூறியது, மக்கள் தொகை அதிகமாக இருப்பதில் முதல் நிலை ஊராட்சியாக தரம் உயர்ந்தலாம். பேரூராட்சியுடன் இணைப்பது குறித்து சாதக பாதகங்களை எடுத்து கூறி இப்பகுதி மக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடத்திய பின்பே அதிகாரிகள் முடிவு எடுக்க வேண்டும் என்றார்.

Related posts

ஆர்வத்துடன் மீன்பிடிக்கும் இளைஞர்கள்

நென்மேனி சாலையில் ரயில்வே மேம்பால பணி விரைவில் தொடங்குமா? மக்கள் எதிர்பார்ப்பு

உணவுகளை தயாரிக்க சுத்தமான தண்ணீர் பயன்படுத்த வேண்டும்: உணவகங்களுக்கு அறிவுறுத்தல்