தொண்டியில் போக்குவரத்து பணிமனை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

 

தொண்டி, ஜன. 20: தொண்டியை மையமாக வைத்து நம்புதாளை, முகிழ்த்தகம், சோலியக்குடி, கரங்காடு, முள்ளிமுனை, கொடிபங்கு, வட்டாணம், எஸ்.பி.பட்டினம் என 50க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. கிராம பகுதி மட்டுமின்றி அனைத்து பகுதி மக்களும் அலுவல் மருத்துவம் உள்ள்ட்ட பல்வேறு காரணங்களுக்காக மதுரை உள்ள்ட்ட பகுதிகளுக்கு தினமும் செல்கின்றனர். தொண்டியிலிருந்து சென்னை, மதுரை, திருச்சி, ராமேஸ்வம் உள்ளிட்ட அனைத்து பகுதிக்கும் பகல் நேரங்களில் போக்குவரத்து வசதி உள்ளது. ஆனால் இரவு நேரத்தில் போதிய போக்குவரத்து வசதி இல்லை.

இதனால் திருவாடானையில் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. திருவாடானை வரை வரும் பயணிகள் போதிய போக்குவரத்து வசதியின்றி இரவு முழுவதும் காத்திருக்கின்றனர். இரவு நேரத்தில் குறிப்பிட்ட நேரத்திற்கு பிறகு திருவாடானை வரை வரும் பஸ் மீண்டும் தேவகோட்டைக்கு செல்கிறது. இதனால் அரசுக்கு விண் செலவு ஏற்படுகிறது.

தொண்டியை மையமாக வைத்து போக்குவரத்து பணிமனை அமைந்தால் இரவு முழுவதும் போக்குவரத்து வசதி இருக்கும் இது பொதுமக்களுக்கு பயனாக அமையும் எரிபொருள் சிக்கனமும் ஏற்படும். பணிமனை அமைக்க பல்வேறு காலகட்டத்தில் இடம் தேர்வு நடைபெற்றது. ஆனால் கடந்த ஆட்சி காலத்தில் பல்வேறு அரசியல் காரணங்களால் தொண்டியில் பணிமனை அமைக்கும் பணிக்கு தடை ஏற்பட்டது. தற்போது அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related posts

பேனர் வைத்தவர்கள் மீது வழக்கு

மணல் சிற்பத்தில் புதுவை; ஆயி மண்டபம், முதல்வர் முகம்

பெண்ணிடம் கந்துவட்டி கொடுமை வீட்டை பூட்டி வெளியேற்றிய அவலம்