தொண்டியில் அனுமதி இல்லாமல் சாலை ஓரங்களில் டிஜிட்டல் பேனர்

 

தொண்டி, மார்ச் 1: விளம்பர பேனர்கள் தற்போது அதிகளவில் சாலை ஓரங்களில் காணப்படுகிறது. சில இடங்களில் கீழே விழுந்து ஆபத்தை ஏற்படுத்தும் விதமாகவும் உள்ளது. இவ்வாறு வைக்கப்படும் பேனர்கள் ஊராட்சி மன்றம், பேரூராட்சி, காவல் துறை அனுமதி எதுவும் பெறாமல் வைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. தொண்டி செக்போஸ்ட் பகுதியில் வைக்கப்படும் பேனர்களால் வளைவுகளில் எதிரே வரும் வாகனம் தெரியாமல் சிரமப்படுகின்றனர்.

மேலும் புது பஸ் ஸ்டாண்ட் அருகில் வைக்கப்படும் பேனர்களால் பஸ் ஸ்டாண்டை விட்டு வெளியே வர கடும் சிரமம் அடைகின்றனர். எவ்வித அனுமதியும் இல்லாமல் வைக்கும் பேனர்களை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து போலீசாரிடம் கேட்டபோது, அனுமதி இல்லாமல் வைத்துள்ள பேனர்களை அப்புறப்படுத்த கூறியுள்ளோம். மீறினால் வழக்கு தொடுக்கப்படும். அனுமதி பெற்றே பேனர் வைக்க வேண்டும் என்றனர்.

Related posts

வெளிநாட்டில் வேலை வள்ளியூர் பிரமுகரிடம் ரூ.10 லட்சம் மோசடி: கேரள முதியவர் கைது

சுரண்டை அரசு கல்லூரியில் சேர விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்

ஒன்றிய தொழிலாளர் அமைச்சகம் மூலம் பீடித் தொழிலாளர்கள் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை ஆணையர் தகவல்