தொட்டபெட்டா சாலையில் சுற்றுலா பயணிகளை அச்சுறுத்தும் அபாய கரமான மரங்களை அகற்ற கோரிக்கை

 

ஊட்டி,ஜன.19: சுற்றுலா பயணிகளை அச்சுறுத்தி வரும் அபாயகரமான மரங்களை அகற்ற வேண்டும் என சுற்றுலா ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஊட்டிக்கு நாள்தோறும் வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இங்கு வரும் சுற்றுலா பயணிகள் ஊட்டி அருகேயுள்ள தொட்டபெட்டாவிற்கு செல்கின்றனர். இங்கு சென்று இயற்கை அழகை கண்டு ரசித்து செல்கின்றனர்.

இந்நிலையில், தொட்டபெட்டா செல்லும் சாலையில் கோத்தகிரி சாலை சந்திப்பு முதல் தொட்டபெட்டா சிகரம் வரையில் சாலையோரங்களில் ஏராளமான கற்பூர மரங்கள் உள்ளன. இதில், ஒரு சில மரங்கள் விழும் நிலையில்,சாலையில் தொங்கிக் கொண்டிருக்கிறது. இந்த மரங்கள் சிறிய காற்று அடித்தாலும் விழும் அபாயம் நீடிக்கிறது.மேலும், எப்போதும் சாலையில் நிழல் விழுவதால், சாலையும் பழுதடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

எனவே, சுற்றுலா பயணிகள் மற்றும் வாகன ஓட்டுநர்களை அச்சுறுத்தி வரும் இந்த ராட்சத கற்பூர மரங்கள் மற்றும் சீகை மரங்களை அகற்ற வனத்துறையினர் மற்றும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுலா ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Related posts

அலங்காநல்லூர் அருகே மண் சுவர் இடிந்து விழுந்து மூதாட்டி பலி

சமயநல்லூர் அருகே சரக்கு வேன் மோதி வாலிபர் பலி

விபத்தின்றி பணியாற்றிய டிரைவருக்கு தங்க பதக்கம்