தொட்டபெட்டாவில் அலைமோதிய சுற்றுலா பயணிகள் கூட்டம்

ஊட்டி: ஊட்டியில் இதமான காலநிலை நிலவி வரும் நிலையில் தொட்டபெட்டா சிகரத்தில் சுற்றுலா பயணிகள் கூட்டம் நேற்று அதிகமாக காணப்பட்டது. நீலகிரி மாவட்டம் ஊட்டி – கோத்தகிரி சாலையில் சுமார் 8 கி.மீ. தொலைவில் தொட்டபெட்டா சிகரம் அமைந்துள்ளது. தமிழகத்தின் மிக உயரமான சிகரங்களில் ஒன்றான தொட்டபெட்டாவை காண சுற்றுலா பயணிகள் அதிகளவு வந்து செல்வது வழக்கம். இங்குள்ள தொலைநோக்கி மூலம் ஊட்டி நகரையும், அவலாஞ்சி, வேலிவியூ பள்ளத்தாக்கு, குன்னூர் மற்றும் இயற்கை காட்சிகளையும் பார்த்து ரசிப்பது வழக்கம். இந்நிலையில், இம்மாத துவக்கம் முதல் பெய்த மழை காரணமாக ஊட்டி வர கூடிய சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை கணிசமாக குறைந்து காணப்பட்டது. இதேபோல், தொட்டபெட்டாவும் வெறிச்சோடியது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக மழை குறைந்த நிலையில், சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. இந்நிலையில், கடந்த இரு நாட்களாக மேகமூட்டம் மற்றும் லேசான வெயில் உள்ளிட்ட இதமான காலநிலையால் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து காணப்பட்டது. இதேபோல், தொட்டபெட்டா சிகரத்திலும் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. அங்குள்ள பாறைகளில் நின்று சுற்றுலா பயணிகள் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்….

Related posts

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் 15ம் தேதியே தொடங்க இருப்பதாக வானிலை மையம் தகவல்!

பட்டினப்பாக்கம் லூப் சாலையில் ரூ.9.97 கோடியில் அமைக்கப்பட்ட நவீன மீன் மார்க்கெட்டில் கடைகளை விரைந்து ஒதுக்கீடு செய்ய வேண்டும்: வியாபாரிகள் கோரிக்கை

அரக்கோணம், ரேணிகுண்டா, கூடூர் வழித்தடத்தில் விபத்து குறித்து எச்சரிக்கை செய்யும் ‘கவாச்’ தொழில்நுட்பம் அறிமுகம்: டெண்டர் கோரியது தெற்கு ரயில்வே