தொடர் விடுமுறை காரணமாக வாகமனில் சுற்றுலாப்பயணிகள் வருகை அதிகரிப்பு-தழுவிச்செல்லும் மேகத்தால் உற்சாகம்

கூடலூர் : தொடர் விடுமுறை காரணமாக கேரளாவில் உள்ள சுற்றுலாத்தலமான வாகமனில் சுற்றுலாப்பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. சுற்றுலாவை மேம்படுத்தும் விதமாக மலைசார்ந்த இயற்கை எழில் கொண்ட பகுதிகளை எல்லாம் கேரள அரசு சுற்றுலாத்தலமாக்குவதில் தீவிரம் காட்டி வருகிறது. இதன்படி இடுக்கி மாவட்டத்தில் உள்ள வாகமன் பகுதியில் கேரள வனத்துறையும், சுற்றுலாத்துறையும் இணைந்து சுற்றுலாப்பயணிகளுக்கு வேண்டிய வசதிகள் செய்து கொடுப்பதால், கிறிஸ்துமஸ் புத்தாண்டு தொடர் விடுமுறையை முன்னிட்டு இங்கு வரும் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கத்  தொடங்கி உள்ளது.இடுக்கி மாவட்டம் ஏலப்பாறை அருகே கடல் மட்டத்திலிருந்து 5 ஆயிரம் அடி உயரத்தில் உள்ள இந்த இடத்தை, நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப்பயணிகள் கண்டு ரசிக்கின்றனர். இங்குவரும் சுற்றுலாப்பயணிகள் தற்கொலை விளிம்பு, மொட்டைக்குன்று, பைன் மரக்காடுகள், வாகமன் அருவி, பாரா கிளைடிங் பயிற்சி இடம், குரிசுமலை, முருகன்மலை ஆகியவற்றை ஆர்வத்துடன் ரசிப்பது வழக்கமாக உள்ளது.வாகமன் மிக உயரமான இடத்தில் அமைந்துள்ளதால் ஆண்டுதோறும் ஜனவரி மாதத்தில் இங்கு பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் கலந்து கொள்ளும் பாராகிளைடிங் போட்டி நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது. …

Related posts

ராமேஸ்வரம் கோயிலுக்குள் மழை நீர்: பக்தர்கள் கடும் அவதி

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பாண்டூர் கிராம மக்கள் சாலை மறியல்

பசுமை தீர்ப்பாய உத்தரவின் பேரில் கூவம் ஆற்றில் கட்டிட கழிவுகள் அகற்றம்: தேசிய நெடுஞ்சாலை ஆணையம் நடவடிக்கை