தொடர் மழை காரணமாக சிம்ஸ் பூங்காவில் 2ம் கட்ட சீசனுக்கு பூத்த மலர்கள் அழுகியது‌

குன்னூர் :  குன்னூர் சிம்ஸ் பூங்காவில் 2ம் கட்ட சீசனுக்கு பூத்திருந்த மலர்கள் தற்போது பெய்து வரும் தொடர்மழை காரணமாக அழுகி காணப்படுகிறது. நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் 2ம் கட்ட சீசன் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் நடப்பது வழக்கம். இந்த சீசனை முன்னிட்டு, நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து பூங்காக்களிலும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு மலர் செடிகள் நடவு செய்யப்பட்டிருந்தது. குறிப்பாக, குன்னூர் சிம்ஸ் பூங்காவில் 1 லட்சம் மலர் நாற்றுகள் நடவு செய்யப்பட்டது. இதில், பூக்கள் பூத்து குலுங்கியது.ஆனால், கடந்த சில தினங்களாக குன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இரவு நேரங்களில் பரவலாக கன மழை பெய்து வருகிறது. இதனால் பூக்கள் அனைத்தும் முன்கூட்டியே அழுக தொடங்கியது. வழக்கத்தை விட சுற்றுலா பயணிகள் வரத்தும் வெகுவாக குறைந்ததால் பூங்கா வெறிச்சோடி காணப்பட்டது. இந்நிலையில் பூக்கள் அழுகி வருவதால் 2ம் கட்ட சீசனுக்கு ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள், கடந்த ஆண்டுகளை போல மலர்கள் அழகை ரசிக்க முடியாமல் ஏமாற்றத்திற்கும் ஆளாகும் சூழல் நிலவுகிறது என பூங்கா ஊழியர்கள் தெரிவித்தனர். …

Related posts

நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி தமிழ்நாடு முழுவதும் அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

சென்னையில் ஆண்டுக்கு 28,000 நாய்களுக்கு இன கட்டுப்பாட்டு சிகிச்சை மேற்கொள்ள மாநகராட்சி நடவடிக்கை

பண்ருட்டி அருகே 2000 லிட்டர் மெத்தனால் பதுக்கல்: பெட்ரோல் பங்க்-கிற்கு சீல்; சிபிசிஐடி அதிரடி