தொடர் மழை காரணமாக அரசு மருத்துவமனையை வெள்ள நீர் சூழ்ந்தது: அமைச்சர், எம்எல்ஏ நேரில் ஆய்வு

தாம்பரம்: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, பல பகுதிகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு முதல் பெய்த கனமழை காரணமாக குரோம்பேட்டை அரசு மருத்துவமனையின் பழைய கட்டிடத்தில் நேற்று காலை வெள்ளநீர் புகுந்தது. இதனால், கீழ் தளத்தில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகள் அனைவரும் உடனடியாக மேல் தளத்திற்கும், புதிய கட்டிடத்திற்கும் மாற்றப்பட்டனர். பின்னர், மழைநீரை அகற்றும் பணியில், ஊழியர்கள்  தீவிரமாக ஈடுபட்டனர். இதுபற்றி அறிந்த ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், பல்லாவரம் தொகுதி எம்எல்ஏ இ.கருணாநிதி, மருத்துவமனை நிர்வாகிகள் மற்றும் நகராட்சி அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, பார்வையிட்டனர். பின்னர், மருத்துவமனையில் தேங்கியுள்ள மழைநீரை விரைந்து அகற்றும்படி நகராட்சி அதிகாரிகளுக்கு அமைச்சர், எம்எல்ஏ உத்தரவிட்டனர். அதன்பேரில், ராட்சத மின் மோட்டார்கள் மூலம் ஊழியர்கள் மழைநீரை அகற்றினர். இதனால், நோயாளிகள், மருத்துவர்கள், மருத்துவமனை ஊழியர்கள் நிம்மதியடைந்தனர்….

Related posts

பெண்ணிடம் ₹2.50 லட்சம் மோசடி விவகாரம் வடசென்னை மாவட்ட பாஜ செயலாளர் கைது: தனிப்படை போலீசார் அதிரடி

சென்னையில் கடந்த 3 ஆண்டுகளில் சாலைகளில் சுற்றித்திரிந்த 6,876 ஆதரவற்றோர் மீட்பு

பழவேற்காடு – காட்டுப்பள்ளி இடையே உள்ள சாலையில் மீண்டும் கடல் சீற்றத்தால் மணல் திட்டுகள்:  வாகன ஓட்டிகள் அவதி  பாலம் அமைத்து தர கோரிக்கை