தொடர் மழையால் பாதிக்கப்பட்ட சுதேவநல்லூர் ஒன்றிய பகுதியில் கலெக்டர் ஆய்வு: சாயிகளிடம் குறைகளை ேகட்டறிந்தார்

சிவகிரி, டிச. 25: தொடர் மழையால் பாதிக்கப்பட்ட வாசுதேவநல்லூர் ஊராட்சி ஒன்றிய பகுதிகளை தென்காசி மாவட்ட கலெக்டர் துரை ரவிச்சந்திரன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ன்காசி மாவட்டத்தில் கடந்த 17ம் தேதி இடைவிடாது பெய்த மழை காரணமாக பல்வேறு பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் வாசுதேவநல்லூர் ஊராட்சி ஒன்றிய பகுதியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மாவட்ட கலெக்டர் துரை ரவிச்சந்திரன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அரியூர் பகுதியில் மழை வெள்ளத்தால் விளைநிலங்களில் கடும் சேதம் ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக நெல், உளுந்து, மக்காச்சோளம் போன்ற பயிர்கள் மழையால் சேதமடைந்துள்ளது. இதனை மாவட்ட கலெக்டர் நேரில் ஆய்வு செய்தார். அப்போது விவசாயிகளிடம் ஏற்பட்ட இழப்பு குறித்து கேட்டறிந்தார். தொடர்ந்து, நாரணபுரம் பகுதியில் உள்ள பாறை குளம் மழையால் சேதமடைந்துள்ளது. இதனை நேரில் பார்வையிட்ட கலெக்டர் குளத்தில் மறு சீரமைப்பு பணிகளை விரைந்து மேற்கொள்வது குறித்து அறிவுரை வழங்கினார். ஆய்வின்போது சங்கரன்கோவில் ஆர்டிஓ சுப்புலட்சுமி, தாசில்தார் ஆனந்த், வேளாண்மை உதவி இயக்குநர் இளஞ்செழியன், வேளாண்மை துணை அலுவலர் காசி, மண்டல துணை தாசில்தார் வெங்கட சேகர், யூனியன் சேர்மன்கள் பொன் முத்தையா பாண்டியன், லாலா சங்கரபாண்டியன், பிடிஓக்கள் விஜயகணபதி, ரவிச்சந்திரன் ஆகியோர் உடனிருந்தனர்.

Related posts

ஆசிரியர்கள் கலந்தாய்வுக்கு எதிராக நடத்தும் போராட்டத்தில் பங்கேற்க மாட்டோம் பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு அறிவிப்பு

கஞ்சா விற்றவர் கைது

முப்பெரும் சட்டங்களை அமல்படுத்த எதிர்ப்பு திருச்சியில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்