தொடர் மழையால் பயிர்கள் சேதம் ஹெக்டேருக்குரூ.20 ஆயிரம் நிவாரணம்: மறுநடவு செய்யரூ.6 ஆயிரத்துக்கு இடுபொருட்கள்; சாலைகள், வடிகால்களை சீரமைக்கரூ.300 கோடி; முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: வடகிழக்கு பருவ மழையால் முழுமையாக சேதமடைந்த பயிர்களுக்கு ஹெக்டேருக்குரூ.20 ஆயிரம் நிவாரண உதவி வழங்கப்படும் என்றும், பகுதியளவு சேதமடைந்த பயிர்களுக்கு மறுநடவு செய்யரூ.6 ஆயிரம் மதிப்பில் இடுபொருள் வழங்கவும், சாலை மற்றும் வடிகால்களை சீரமைக்கரூ.300 கோடி ஒதுக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். வடகிழக்கு பருவமழையினால் சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களிலும், கன்னியாகுமரியிலும் மிக அதிகளவில் சாலைகள் உள்ளிட்ட பல்வேறு உட்கட்டமைப்பு வசதிகள் பாதிக்கப்பட்டன. முதல்வர் மு.க.ஸ்டாலின் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் சென்று தொடர்ந்து ஆய்வு செய்து நிவாரண பணிகளை முடுக்கிவிட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார். மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இந்த பகுதிகளில் சாலைகள், வடிகால்கள் மற்றும் இதர உட்கட்டமைப்பு வசதிகளை சீரமைப்பதற்கான பணிகள் விரைந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும், டெல்டா மாவட்டங்களில் கனமழை காரணமாக ஏற்பட்டுள்ள பயிர் சேதங்கள் குறித்து ஆய்வு செய்து, விவசாயிகளை சந்தித்து, அவர்களது கருத்துக்களை கேட்டு, அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்க கூட்டுறவு துறை அமைச்சர் இ.பெரியசாமி தலைமையில் 6 அமைச்சர்கள் அடங்கிய குழுவினை அமைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 11ம் தேதி உத்தரவிட்டிருந்தார்.இதன்படி, இந்த குழுவினர் உடனடியாக கடந்த 12ம் தேதி அன்று தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் ஆய்வு மேற்கொண்டு நீரில் மூழ்கிய பயிர்களை பார்வையிட்டு, பயிர் பாதிப்பு நிலவரம் குறித்து கள ஆய்வு மேற்கொண்டு, பின்னர் விவசாயிகளை சந்தித்து அவர்களின் கருத்துக்களை கேட்டறிந்தனர். முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 13ம் தேதி டெல்டா மாவட்டங்களில் கள ஆய்வு மேற்கொண்டு பயிர் சேதங்கள் குறித்து விவசாயிகளிடம் கேட்டறிந்தார். இந்நிலையில், நேற்று பயிர் சேதங்கள் குறித்த அறிக்கையை அமைச்சர்கள் குழு, முதலமைச்சரிடம் சமர்ப்பித்தனர். இக்குழுவின் அறிக்கை மீதான ஆய்வு கூட்டத்தில் அமைச்சர்கள் மற்றும் தலைமை செயலாளர் உள்ளிட்ட உயர் அலுவலர்கள் கலந்து கொண்டார்கள். அவர்களின் விரிவான ஆலோசனைக்கு பின்னர், முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை:* அறுவடைக்கு தயாராக இருந்த குறுவை-கார்-சொர்ணவாரி பயிர்கள், முழுமையாக சேதமடைந்த இனங்களில் விவசாயிகளுக்கு இழப்பீடாக, ஹெக்டேர் ஒன்றுக்குரூ.20 ஆயிரம் வழங்கப்படும்.* நடப்பு சம்பா பருவத்தில் நடவு செய்து, நீரில் மூழ்கி சேதமடைந்த பயிர்களை மறு சாகுபடி செய்திட ஏதுவாக, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு 6 ஆயிரத்து 38 ரூபாய் மதிப்பீட்டில் இடுபொருள்கள் வழங்கப்படும். அதன்படி, குறுகியகால விதை நெல் – 45 கிலோ மறு சாகுபடி செய்திடரூ.1,485, நுண்ணூட்ட உரம் – 25 கிலோ மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களில் மஞ்சள் நோயை தடுத்திட ரூ.1,235, யூரியா – 60  கிலோ தழைச்சத்து கிடைத்திடரூ.354, டிஏபி உரம் –  125 கிலோ தழைச்சத்து மற்றும் மணிச்சத்து கிடைத்திடரூ.2,964 என மொத்தம்ரூ.6,038 வழங்கப்படும்.* மழை வெள்ளத்தால் மாநிலம் முழுவதும் பாதிப்படைந்த சாலைகள், வடிகால்கள் மற்றும் இதர உட்கட்டமைப்பு வசதிகளை சரி செய்யரூ.300 கோடி வழங்கப்படும். இந்த கூட்டத்தில், குழுவின் தலைவர் கூட்டுறவு துறை அமைச்சர் இ.பெரியசாமி, குழுவின் உறுப்பினர்கள் தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன், உணவு மற்றும் உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் மற்றும் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், தலைமை செயலாளர் இறையன்பு, வருவாய் நிர்வாக ஆணையர் பணீந்திர ரெட்டி, நிதித்துறை செயலாளர் முருகானந்தம், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை செயலாளர் குமார் ஜயந்த், வேளாண்மை துறை செயலாளர் சமயமூர்த்தி, துறை இயக்குநர் அண்ணாதுரை, பேரிடர் மேலாண்மை துறை இயக்குநர் சுப்பையன் ஆகியோர் கலந்து கொண்டனர்.* வடகிழக்கு பருவ மழையினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று தொடர்ந்து ஆய்வு செய்து நிவாரண பணிகளை முடுக்கிவிட்டுள்ளார்.* டெல்டா மாவட்டங்களில் பயிர் சேதங்கள் குறித்து ஆய்வு செய்து அரசுக்கு அறிக்கை அளிக்க கூட்டுறவு துறை அமைச்சர் இ.பெரியசாமி தலைமையில் 6 அமைச்சர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டது.* அமைச்சர்கள் குழு தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் பயிர் பாதிப்பு நிலவரம் குறித்து கள ஆய்வு செய்தனர்.* முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 13ம் தேதி டெல்டா மாவட்டங்களில் கள ஆய்வு மேற்கொண்டு பயிர் சேதங்கள் குறித்து விவசாயிகளிடம் கேட்டறிந்தார்….

Related posts

அனைத்து வகைகளிலும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார்: அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

அரக்கோணம், ரேணிகுண்டா, கூடூர் வழித்தடத்தில் விபத்து குறித்து எச்சரிக்கை செய்யும் ‘கவாச்’ தொழில்நுட்பம் அறிமுகம்:டெண்டர் கோரியது தெற்கு ரயில்வே

தண்டையார்பேட்டை வினோபா நகரில் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையவர் கைது: போலீசார் தீவிர விசாரணை