தொடர் மழையால் நிரம்பிய தடுப்பணை

ராசிபுரம், செப்.25: ராசிபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்து வரும் தொடர் மலையின் காரணமாக தடுப்பணை நிரம்பியது. நாமக்கல் மாவட்டத்தில், கடந்த ஒரு மாத காலத்திற்கு மேலாக அடிக்கடி மழை பெய்து வருகிறது. இதனால் ராசிபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள ஏரி, குளம் குட்டைகளுக்கு நீர்வரத்து துவங்கி உள்ளது. ராசிபுரம்-சேலம் சாலை கோரைக்காடு அருகே, ராசிபுரம் ஏரிக்கு வரும் வாய்க்காலில் சிறிய தடுப்பணை கட்டப்பட்டுள்ளது.

கடந்த சில வாரங்களாக பெய்த ெதாடர் மழையால், அந்த தடுப்பணை நிரம்பி வழிந்து ராசிபுரம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. ராசிபுரம் ஏரிக்கு வரும் பல்வேறு பகுதிகளில் உள்ள வாய்க்கால்களும், ஓடைகளும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. அதனை அகற்றி ராசிபுரம் ஏரிக்கு நீர் வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related posts

நெற்பயிர், மா, வாழை மரங்களை துவம்சம் செய்த ஒற்றை யானை வனப்பகுதிக்குள் விரட்டியடிப்பு

நுகர்பொருள் வாணிப கிடங்கில் இருந்து செல்லும் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் உத்தரவு

இபிஎப்ஓ பி.ஏ., இஎஸ்ஐசி நர்சிங் அலுவலர் பணியிடங்களுக்கான யுபிஎஸ்சி எழுத்து தேர்வு