தொடர் மழையால் கொடைக்கானல் ஏரியில் படகு சவாரி நிறுத்தம்

கொடைக்கானல்: தொடர் மழையால் கொடைக்கானல் ஏரியில் படகு சவாரி நிறுத்தப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தின் பிரபல சுற்றுலாத்தலமான கொடைக்கானல் மலைப்பகுதிகளில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வந்தது. இந்நிலையில் நேற்று சற்று மழையளவு குறைந்தது. ஆனால் சூறைக்காற்று வீசியதோடு, சாரல்மழை தொடர்ந்து பெய்தது. தொடர் மழை காரணமாக கொடைக்கானலில் கடுங்குளிர் நிலவி வருகிறது. 
இதனால், மோயர் பாயின்ட், பைன் மரக்காடுகள், குணா குகை, தூண் பாறை, பிரையண்ட் பூங்கா, செட்டியார் பூங்கா, ரோஜா பூங்கா, கோக்கர்ஸ் வாக் உள்ளிட்ட அனைத்து சுற்றுலா இடங்களிலும் சுற்றுலாப்பயணிகள் குறைந்தே காணப்பட்டனர். தொடர் மழை காரணமாக கொடைக்கானல் ஏரியில் படகு சவாரி நேற்று முதல் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக படகு குழாம் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

Related posts

சேலம், சிவகங்கை மாவட்டங்களில் இரவில் இடியுடன் கனமழை

இந்திய விமானப்படையின் 92வது ஆண்டையொட்டி சென்னை மெரினாவில் இன்று சாகச நிகழ்ச்சி

போலி இ-மெயில் அனுப்பி பணம் பறிக்கும் மோசடி கும்பல்; எச்சரிக்கையாக இருக்க சைபர் போலீஸ் அறிவுறுத்தல்