தொடர் மழையால் ஏரி உடைந்தது: பொதுப்பணித்துறையினர் சீரமைத்தனர்

செய்யூர்: மதுராந்தகம் அருகே பெய்து வரும் தொடர் மழையால் ஏரிக்கரை உடைந்தது. அதனை உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற அதிகாரிகள் துரித நடவடிக்கை மேற்கொண்டு உடைப்பை தற்காலிகமாக சரி செய்தனர். மதுராந்தகம் அடுத்த பெருவெளி ஊராட்சி பையம்பாடி கிராமத்தில் 150 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஏரி உள்ளது. பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள, இந்த ஏரி நீர் மூலம் 350 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெருகின்றன.  இந்நிலையில், கடந்த சில தினங்களாக பெய்த தொடர் மழையின் காரணமாக இந்த ஏரி முழுக்கொள்ளளவை எட்டியது. இதனால், அப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சியடைந்த நிலையில் தொடர் மழையின் காரணமாக இந்த ஏரியின் ஒரு பகுதி மதகை ஒட்டி கரையில் அரிப்பு ஏற்பட்டு உடைந்தது. அதன் வழியாக ஏரி நீர் வெளியேறியது. இதனால், அதிர்ச்சியடைந்த அப்பகுதி விவசாயிகள் உடனடி அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். இதனையடுத்து, அங்கு விரைந்து சென்ற மதுராந்தகம் கோட்டாட்சியர் சரஸ்வதி, தாசில்தார் நடராஜன், மதுராந்தகம் பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் நீல்முடியோன், இளநிலை பொறியாளர் குமார் உள்ளிட்ட அதிகாரிகள் சேதமடைந்த பகுதியில் நீர் வெளியேறாத வகையில் தற்காலிகமாக மண் மூட்டைகளை அடுக்கி நீர் வெளியேறுவதை தடுத்தனர். மேலும், மழை காலம் முடிந்த பின் கரையை முறையாக சீரமைத்து தருவதாக விவசாயிகளுக்கு அதிகாரிகள் உறுதியளித்தனர்….

Related posts

ஆதிதிராவிடர், பழங்குடியினர் நல ஆணைய தலைவராக முன்னாள் நீதிபதி தமிழ்வாணன் நியமனம்.! எஸ்சி, எஸ்டி பணியாளர் சங்கம் வரவேற்பு

முதியோர் இல்லங்களுக்கு பதிவு உரிமை சான்று கட்டாயம்

ஆந்திர மாநில துணை முதல்வரும், நடிகருமான பவன் கல்யாணுக்கு அர்ச்சகர்கள் சங்கம் கண்டனம்!