தொடர் கனமழை எதிரொலி : திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆண்டியப்பனூர் அணை முழு கொள்ளளவை எட்டியது!!

திருப்பத்தூர்  : தொடர் கனமழை காரணமாக திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆண்டியப்பனூர் அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் ஆண்டியப்பனூர் அணை திமுக ஆட்சியில் கட்டப்பட்டதாகும். இந்த அணை சுற்று வட்டாரபகுதிகளான ஆண்டியப்பனுர், குசலாப்பட்டு, ஜோண்டரம்பள்ளி, ஏழருவி போன்ற பல்வேறு பகுதிகளுக்கு நீர் பாசன வசதிக்காக கட்டப்பட்டது. இதனால், பல ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாயிகள் பயனடைந்து வந்தனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக தமிழகம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் மழைபெய்து வருகிறது. குறிப்பாக திருப்பத்தூர் மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பகொட்டி வருகிறது. இரவு நேரத்தில் பெய்த கனமழை காரணமாக ஜவ்வாது மலை புதூர் நாடு பகுதிகளில் காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்தது. ஏலகிரி மலை உள்ளிட்ட பகுதிகளில் ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தால் ஆண்டியப்பனூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இந்த அணையின் மொத்த கொள்ளளவு 133 மில்லியன் மில்லி மீட்டர் உள்ள நிலையில் தற்போது, இந்த அணை 22 ஆண்டுகளில் 10வது முறையாக நிரம்பி வழிகிறது. இதனால், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதேபோல், இந்த ஆணை நிரம்பி வருகின்ற காரணத்தினால் கரையோர பகுதிகளான குடுசலாப்பட்டு, மாடப்பள்ளி, மடவாளம் மற்றும் கனமந்தூர் உள்ளிட்ட கரையோர பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது….

Related posts

கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகளுக்கு கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு நிலுவை தொகை ₹94.49 கோடி: அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவிப்பு

அமாவாசை முன்னிட்டு இன்றும், நாளையும் 1,065 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

குரூப் 1 தேர்வுக்கான ஹால் டிக்கெட்: டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் வெளியீடு