தொடர்மழையால் நிரம்பும் தடுப்பணைகள் விவசாயிகள் மகிழ்ச்சி

நிலக்கோட்டை: தொடர்மழை காரணமாக நிலக்கோட்டை, ெகாடைரோடு பகுதி ஓடைகள் மற்றும் காட்டாறுகளில் உள்ள தடுப்பணைகள் நிரம்பி வழிகின்றன. நிலக்கோட்டை, ெகாடைரோடு மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக இப்பகுதியில் உள்ள காட்டாறுகள் மற்றும் ஓடைகளில் நீர்வரத்து துவங்கியுள்ளது. இதனையடுத்து காட்டாறுகளில் உள்ள தடுப்பணைகள் நிரம்பி வழிகின்றன. குறிப்பாக கொடைரோடு சிறுமலை அடிவார பகுதியான பள்ளபட்டி கன்னிமார் ஓடை, கோமாளியப்பன் ஓடை மற்றும் காற்றாற்றில் கட்டப்பட்டுள்ள தடுப்பணைகளில் மழைநீர் நிரம்பி வழிகிறது. இதனால் வறட்சி மிகுந்த இந்த நிலப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் உயர வாய்ப்புள்ளது. இந்தாண்டு கோடை கால வறட்சி ஏற்படாது என விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்….

Related posts

பல மாதங்களாக முடங்கி கிடந்த சோழிங்கநல்லூர்-சிறுசேரி மெட்ரோ பணிகள் மீண்டும் தொடங்கின

வரும் 23ம் தேதி தாக்கல் செய்யவுள்ள ஒன்றிய பட்ஜெட்டில் தமிழக ரயில்வே திட்டங்களுக்கு அதிக நிதி கிடைக்குமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு

துணை கலெக்டர், டிஎஸ்பி உள்ளிட்ட பதவிகளுக்கான டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதல்நிலை தேர்வு: தமிழ்நாடு முழுவதும் 13ம் தேதி நடக்கிறது