தொடர்பில் இருந்தவர்கள் எண்ணிக்கை 251 ஆனது நிபாவால் இறந்த கேரள சிறுவனின் உறவினர்கள் 38 பேருக்கு அறிகுறி: தனி வார்டில் வைத்து கண்காணிப்பு

திருவனந்தபுரம்: கேரளாவில் நிபா வைரஸ் பாதிப்பால் இறந்த சிறுவனுடன் தொடர்பு இருந்தவர்களின் எண்ணிக்கை 251 ஆக உயர்ந்துள்ளது. இதில் நிபா வைரஸ் அறிகுறி இருந்த 38 பேர் கோழிக்கோடு அரசு மருத்துவமனை தனி வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கேரள மாநிலம், கோழிக்கோடு அருகே உள்ள சாத்தமங்கலம், பழூர் பகுதியை சேர்ந்த அபூபக்கர்- வாஹிதா தம்பதியின் 12 வயது மகன் முகமது ஹாசிம், 2 நாட்களுக்கு முன் நிபா வைரசால் பாதிக்கப்பட்டு இறந்தான். அதைத் தொடர்ந்து, சிறுவனின் தாய் வாஹிதா, சிறுவனுக்கு சிகிச்சை அளித்த 2 நர்சுகளுக்கு நிபா வைரஸ் நோய் அறிகுறிகள் தென்பட்டது. 3 பேரும் கோழிக்கோடு அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை தனி வார்டில் அனுமதிக்கப்பட்டனர். இது தவிர சிறுவனுடன் தொடர்பில் இருந்த உறவினர்கள் உள்பட 188 பேர் சுகாதார துறையினர் கண்காணிப்பில் கொண்டு வரப்பட்டனர். இதற்கிடையே, இறந்த சிறுவனுடன் தொடர்பில் இருந்தவர்களின் எண்ணிக்கை நேற்று 251 ஆக உயர்ந்தது. இவர்களில் 121 பேர் சுகாதாரத் துறை ஊழியர்கள் ஆவர். சிறுவனின் தாய், நெருங்கிய உறவினர்களில் 38 பேருக்கு நோய் அறிகுறி இருப்பதாக சந்தேகம் ஏற்பட்டதால், அனைவரும் கோழிக்கோடு அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை தனி வார்டில் அனுமதிக்கப்பட்டு கண்காணிக்கப்படுகின்றனர். இவர்களில் 11 பேரின் உமிழ்நீர், ரத்த மாதிரி ஆகியவை எடுக்கப்பட்டு, சிறுவனின் பெற்றோர் உள்பட 8 பேரின் மாதிரி புனேக்கும், 3 பேரின் மாதிரி ஆலப்புழாவுக்கும் சோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இதில், புனே ஆய்வகம் அளித்த பரிசோதனை அறிக்கையில், 8 பேருக்குமே நோய் பாதிப்பு இல்லை என கூறப்பட்டுள்ளது.* ரம்புட்டான் பழங்கள் ஆய்வுபலியான சிறுவன் ஹாசின், அவரது வீட்டில் உள்ள அனைவரும், பக்கத்து வீட்டில் வளர்க்கப்படும்  மரத்தில் இருந்து ரம்புட்டான் பழத்தை சாப்பிட்டதாக கூறியுள்ளனர். இதையடுத்து, ஒன்றிய சுகாதாரக் குழுவினர் நேற்று அந்த மரத்தில் இருந்து கீழே  விழுந்து கிடந்த ரம்புட்டான் பழங்களை சேகரித்தனர். அதில், சில பழங்களை வவ்வால்கள் கடித்திருந்தன. அவை பரிசோதனைக்காக போபால் ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டன. இதுபோல்,  இறந்த சிறுவனின் வீட்டில் வளர்க்கப்படும் ஆடுகளின் ரத்தமும்  சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. …

Related posts

டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின்

நேபாளத்தில் ஆற்று வெள்ளத்தில் 2 பேருந்துகள் அடித்துச் செல்லப்பட்டதில் இந்தியர்கள் 7 பேர் உயிரிழப்பு

மும்பையில் பல இடங்களில் மழை நீர் தேக்கம்