தொடர்ந்து 50 முறை சூரியநமஸ்காரம் செய்து யோகாவில் உலக சாதனை படைத்தவர்களுக்கு சான்றிதழ்

 

கும்மிடிப்பூண்டி: சர்வதேச யோகா தினத்தையொட்டி, தொடர்ந்து 50 முறை சூரியநமஸ்காரம் செய்து யோகாவில் உலக சாதனை படைத்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. சர்வதேச யோகா தினத்தையொட்டி (ஜூன் 21ம்தேதி), கும்மிடிப்பூண்டியில், செயல்பட்டு வரும் ஸ்ரீ சங்கரி யோகா பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம் சார்பில், பெத்திகுப்பம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் சர்வதேச யோகா தினம் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதில், ஸ்ரீ சங்கரி யோகா பயிற்சி மையத்தின் நிறுவனரும், பயிற்சியாளருமான சந்தியா தலைமை வகித்தார்.

சிறப்பு அழைப்பாளராக கும்மிடிப்பூண்டி ஒன்றிய குழு தலைவர் சிவகுமார் பங்கேற்றார். வேல்ட்வைட் புக் ஆப் ரெக்கார்ட் தீர்ப்பாளர் சிந்துஜா வினீத், செந்தமிழ் விஜயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில், ஸ்ரீ சங்கரி யோகா பயிற்சி மையத்தினை சேர்ந்த 112 மாணவ, மாணவிகள் கலந்துகொண்டு தொடர்ந்து 50 முறை சூரியநமஸ்காரம் செய்து, வேல்ட்வைட் புக் ஆப் ரெக்கார்ட்’ புத்தகத்தில் இடம் பிடித்தது. உலக சாதனை படைத்தவர்கள் மற்றும் பயிற்சியாளருக்கு உலக சாதனைக்கான சான்றுகள் வழங்கப்பட்டது. விழாவில் மாணவ, மாணவிகளின் யோகாசன கலை நிகழ்ச்சிகள் மற்றும் யோகா விழப்புணர்வு நிகழ்வுகள் நடைபெற்றது.

Related posts

கர்நாடகாவில் கொலை குற்றவாளி கைது

மாடிக்கு கம்பியை எடுத்து சென்றபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

ஏற்காட்டில் குற்றச்சம்பவங்களை தடுக்க டிஎஸ்பி தலைமையில் போலீசார் வாகன தணிக்கை