தொடர்ந்து 4வது நாளாக பெட்ரோல், டீசல் விலை உயர்வு: வாகன ஓட்டிகள் கலக்கம்..!

சென்னை: தொடர்ந்து 4வது நாளாக பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வருகிறது. பெட்ரோல் விலை 101 ரூபாயை தாண்டியிருப்பதால் வாகன ஓட்டிகள் கலக்கம் அடைந்துள்ளனர். சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்து வருவதால் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை கடந்த சில வாரங்களாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சென்னையை பொறுத்தவரை ஒரு லிட்டர் பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து 26 காசுகள் அதிகரித்து 101 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு லிட்டர் டீசல் 34 காசுகள் உயர்ந்து 96 ரூபாய் 60 காசுகளாக உள்ளது. கடந்த 10 நாட்களில் மட்டும் பெட்ரோல் ஒரு ரூபாய் 86 காசுகளும், டீசல் 2 ரூபாய் 43 காசுகளும் அதிகரித்துள்ளது. விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் டீசலும் விரைவில் 100 ரூபாயை எட்டிவிடும் என்று சரக்கு போக்குவரத்து வாகன ஓட்டிகள் கலக்கம் அடைந்துள்ளனர். …

Related posts

ஜூலை-02: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை

ரூ.2000 நோட்டுகளில், 97.87% நோட்டுகள் வங்கி மூலம் திரும்பப் பெறப்பட்டுள்ளது: இந்திய ரிசர்வ் வங்கி

ஜூலை-01: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை