தொடர்ந்து 31வது ஆண்டாக அணுசக்தி நிறுவன பட்டியல் இந்தியா – பாக். பரிமாற்றம்

புதுடெல்லி: இந்தியா- பாகிஸ்தான் இடையே அணுசக்தி நிலையங்களை தாக்கக் கூடாது என்ற ஒப்பந்தம், கடந்த 1988ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதி கையெழுத்தானது. இந்த ஒப்பந்தம் 1992 ஜனவரி 1ம் தேதி முதல் பின்பற்றப்பட்டு வருகிறது. அதன்படி, பாகிஸ்தான் தனது அணுசக்தி நிறுவனங்களின் பட்டியலை இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதரக த்தில் ஆண்டுதோறும் வழங்கி வருகிறது. அது போல, இந்தியாவும் தனது அணுசக்தி நிறுவனங்களின் பட்டியலை, டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் அளித்து வருகிறது. இதன்படி, இருநாடுகளும் நேற்று இந்த பட்டியலை பரிமாற்றம் செய்து கொண்டன. இந்த நடைமுறை கடந்த 31 ஆண்டுகளாக பின்பற்றப்பட்டு வருகிறது. புல்வாமா தாக்குதல், எல்லை கடந்த தீவிரவாதம், காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கம் உள்பட பல்வேறு பிரச்னைகள் நீடிக்கும் நிலையிலும், வழக்கமான நடைமுறைப்படி இரு நாடுகளும் அணுசக்தி நிறுவனங்களின் பட்டியலை பரஸ்பரம் பரிமாறிக் கொண்டு வருகின்றன.இந்திய மீனவர்கள் பாகிஸ்தான் சிறைகளில் உள்ள 356 இந்திய மீனவர்கள், 2 சாதாரண மக்களை விடுவிக்கும்படி ஒன்றிய வெளியுறவு அமைச்சகம் நேற்று கோரிக்கை வைத்தது. மேலும், பாகிஸ்தானை சேர்ந்த 282 பேர், 73 மீனவர்கள் தனது பிடியில் உள்ளதாக இந்தியாவும்,  தனது பிடியில் 577 இந்திய மீனவர்கள், 51 இதர இந்தியர்கள் இருப்பதாக  பாகிஸ்தானும் தெரிவித்தன….

Related posts

உத்திரப்பிரதேசத்தில் உயர்அழுத்த மின் கம்பி அறுந்து 20 பேர் காயம்

உத்திரபிரதேச மாநிலம் மதுரா அருகே நிலக்கரி ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து

ஒரே நாடு ஒரே தேர்தல் ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல்: எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு