தொடர்ந்து பெய்த மழையின் காரணமாக சென்னை விமான நிலையத்தில் இணையதள சேவை பாதிப்பு: விமானங்கள் புறப்பாடு தாமதம்

சென்னை: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக சென்னை விமான நிலையத்தில் இணையதள சேவைகள் பாதிக்கப்பட்டது. இதனால், விமானங்கள் தாமதமாக புறப்பட்டு சென்றன.தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தொடங்கியுள்ள நிலையில், தொடர்ச்சியாக பெய்து வரும் பலத்த மழை காரணமாக, சென்னை விமான நிலையத்தில் விமான சேவைகள் தாமதம் ஆகியுள்ளது. நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணியில் இருந்து நேற்று பகல் 12 மணி வரை, சென்னை விமான நிலையத்தில் மொத்தம் 23 விமானங்கள் 30 நிமிடங்களிலிருந்து 3 மணி நேரம் வரை தாமதம் ஆனது. இதில் 10 விமானங்கள் சர்வதேச விமானங்கள். குறிப்பாக, சிங்கப்பூர், குவைத், ஜெர்மன், அபுதாபி, தோகா, சார்ஜா, பக்ரைன், அபுதாபி, இலங்கை போன்ற விமானங்கள் இதில் அடங்கும்.ஜெர்மன் பிராங்பர்ட் நகரிலிருந்து சென்னை வரும் லூப்தான்ஷா விமானம், வரும் வழியில் மருத்துவ காரணங்களுக்காக மும்பையில் தரையிறங்கி விட்டு, தாமதமாக வந்ததால் அந்த விமானம் புறப்பட்டு செல்வது தாமதம் ஆனது. மற்ற விமானங்கள் பயணிகள் போர்டிங் பாஸ், பாதுகாப்பு சோதனைகள் நடத்துவதில் தாமதம் ஏற்பட்டதாலும், சென்னையில் நேற்று முன்தினம் இரவு பெய்த பலத்த மழை காரணமாக சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால், பயணிகள் விமான நிலையத்துக்கு வருவதற்கு தாமதம் ஏற்பட்டது. அதேபோல், விமானத்தையும் இயக்க வேண்டிய விமானிகள், விமான பணியாளர்கள் வருகையிலும் தாமதம் ஏற்பட்டது. அதனால் அந்த விமானங்கள் புறப்பட்டு செல்வதில் தாமதம் ஏற்பட்டதாக தெரிகிறது.மேலும், உள்நாட்டு விமான நிலையத்தில், புறப்பாடு விமானங்களில் 13 விமானங்கள் தாமதமானது. திருச்சி, மதுரை போன்ற பகுதிகளில் கனமழை பெய்ததால் திருச்சி, மதுரை விமானங்கள் தாமதமாக புறப்பட்டு சென்றன. அதோடு மும்பை, கொல்கத்தா, விஜயவாடா, சீரடி, டெல்லி, ஹூப்ளி, செகந்திராபாத், அகமதாபாத் ஆகிய விமானங்களும் தாமதமாக புறப்பட்டுச் சென்றன. மொத்தம் 13 விமானங்கள் தாமதம் ஆகின. இந்த தாமதத்திற்கு காரணம், போர்டிங் பாஸ், பயணிகள் பாதுகாப்பு சோதனைகள் தாமதம், தொடர்ந்து மழை பெய்ததால் பயணிகளின் விமான உடைமைகளை விமானங்களில் ஏற்றுவதில் தாமதம் ஏற்பட்டது. அதோடு பயணிகள் விமான நிலையங்களுக்கு வருவதிலும் தாமதம் ஏற்பட்டது. இதுபோன்ற காரணங்களால், விமானங்கள் தாமதம் ஆனதாக கூறப்படுகிறது. இதனால் சென்னை விமானநிலையத்தில் பயணிகள் கடும் அவதிக்குள்ளானார்கள்….

Related posts

தமிழ்நாட்டை முன்னோடி மாநிலமாக மாற்ற இளைஞர்கள், தொழில் முனைவோர் பால் உற்பத்தியில் ஈடுபட வேண்டும்: பால் வளத்துறை அழைப்பு

புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து 10 ஆயிரம் போலீசாருக்கு பயிற்சி: கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் தகவல்

மெட்ரோ ரயில் பணி காரணமாக பெரம்பூர் மார்க்கெட் அருகே 2 நாள் போக்குவரத்து மாற்றம்