தொடர்ந்து குறைந்து வந்த நிலையில் தங்கம் சவரனுக்கு ரூ.192 அதிகரிப்பு

சென்னை: தொடர்ந்து குறைந்து வந்த நிலையில், தங்கம் விலை நேற்று சவரனுக்கு ரூ.192 அதிகரித்தது. தங்கம் விலை கடந்த 3 மாதத்துக்கும் மேலாக ஏற்றம், இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது. கடந்த 18ம் தேதி தங்கம் விலை கிராமுக்கு ரூ.2 குறைந்து ஒரு கிராம் ரூ.4,596க்கும், சவரனுக்கு ரூ.16 குறைந்து ஒரு சவரன் ரூ.36,768க்கும் விற்கப்பட்டது. 19ம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால் தங்கம் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் சனிக்கிழமை விலையிலே விற்பனையானது. 20ம் தேதி தங்கம் விலை கிராமுக்கு ரூ.22 குறைந்து ஒரு கிராம் ரூ.4,574க்கும், சவரனுக்கு ரூ.176 குறைந்து ஒரு சவரன் தங்கம் ரூ.36,592க்கும் விற்கப்பட்டது. 3வது நாளாக 21ம் தேதி தங்கம் விலை குறைந்தது. கிராமுக்கு ரூ.26 குறைந்து ஒரு கிராம் ரூ.4,548க்கும், சவரனுக்கு ரூ.208 குறைந்து ஒரு சவரன் ரூ.36,384க்கும் விற்கப்பட்டது. தொடர்ந்து நேற்று முன்தினமும் தங்கம் விலை குறைந்தது. கிராமுக்கு ரூ.20 குறைந்து ஒரு கிராம் ரூ.4,528க்கும், சவரனுக்கு ரூ.160 குறைந்து ஒரு சவரன் ரூ.36,224க்கும் விற்கப்பட்டது. தொடர்ந்து 4 நாட்களில் மட்டும் சவரன் ரூ.560 அளவுக்கு குறைந்தது. நாளை கிறிஸ்துமஸ் பண்டிகை, தொடர்ந்து புத்தாண்டு, பொங்கல் திருநாள் என்று அடுத்தடுத்து பண்டிகை நாட்கள் வருகிறது. இந்த நேரத்தில் தங்கம் விலை குறைந்து வந்தது பண்டிகை நேரத்தில் நகை வாங்க காத்திருப்பவர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்த நிலையில் நேற்று யாரும் எதிர்பார்க்காத வகையில் தங்கம் விலை திடீரென அதிகரித்தது. கிராமுக்கு ரூ.24 அதிகரித்து ஒரு கிராம் ரூ.4,552க்கும், சவரனுக்கு ரூ.192 அதிகரித்து ஒரு சவரன் ரூ.36,416க்கும் விற்கப்பட்டது. இந்த விலை உயர்வு நகை வாங்குவோரை சற்று கவலையடைய செய்துள்ளது….

Related posts

தினம், தினம் புதிய உச்சம் கண்ட நிலையில் தங்கம் விலை சற்று குறைந்தது

சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 குறைந்து ரூ.56,760-க்கு விற்பனை..!!

இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!