தொடர்ச்சியாக 5 நாட்களில் மட்டும் ரூ. 640 அதிகரிப்பு : ஆபரணத் தங்கத்தின் விலை சவரன் ரூ.38,336-க்கு விற்பனை!!!

சென்னை: தங்கம் விலை தொடர்ச்சியாக 5 நாட்களில் ஒரு சவரனுக்கு 640 அளவுக்கு அதிகரித்துள்ளது. பொங்கல் உள்ளிட்ட விஷேச தினங்களில் தங்கம் விலை உயர்வு, நகை வாங்குவோரை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தங்கம் விலை கடந்த அக்டோபர் மாதத்தில் இருந்து ஏற்றம், இறக்கத்துடன் இருந்து வருகிறது. கடந்த 30ம் தேதி ஒரு சவரன்  37,696க்கும், 31ம் தேதி 37.,800க்கும் விற்கப்பட்டது. ஆங்கிலப் புத்தாண்டு அன்று தங்கம் விலை உயர்ந்து காணப்பட்டது. ஒரு கிராம் 4,735க்கும், சவரன் 37,880க்கும் விற்க்கப்பட்டது. இந்த நிலையில் ஜனவரி 2ம் தேதியும் தங்கம் விலை அதிகரித்தது. கிராமுக்கு 13 அதிகரித்து ஒரு கிராம் 4,748க்கும், சவரன் 104 அதிகரித்து ஒரு சவரன் 37,984க்கும் விற்கப்பட்டது. ஜனவரி 3ம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால் தங்கம் விலையில் மாற்றம் இல்லை.
இந்த நிலையில் வாரத்தின் முதல் நாளான இன்று, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.352 உயர்ந்து ரூ.38,336-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,792-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.73.70-க்கு விற்பனை ஆகிறது.

தொடர்ச்சியாக 5 நாட்களில் மட்டும் கிராமுக்கு 80, சவரனுக்கு 640 அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் சவரன் மீண்டும் 38 ஆயிரத்தை தொட்டுள்ளது. தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருவது நகை வாங்குவோரை கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. வரும் நாட்களில் பொங்கல் உள்ளிட்ட பண்டிகைகளும், திருமணம் உள்ளிட்ட விஷேச தினங்களும் அதிக அளவில் வருகிறது. இந்த நேரத்தில் விலை உயர்வு நகை வாங்குவோருக்கு கூடுதல் செலவை ஏற்படுத்தியுள்ளதாக நகை வாங்குவோர் கூறி வருகின்றனர்….

Related posts

ரூ.2000 நோட்டுகளில், 97.87% நோட்டுகள் வங்கி மூலம் திரும்பப் பெறப்பட்டுள்ளது: இந்திய ரிசர்வ் வங்கி

ஜூலை-01: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை

மீண்டும் ஏறுமுகத்தில் தங்கம் விலை: சவரனுக்கு ரூ.152 உயர்ந்து ரூ.53,480க்கு விற்பனை.! வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி