தொடரும் அரசு மருத்துவமனை அலட்சியங்கள்… நிரந்தரத் தீர்வு என்ன?

நன்றி குங்குமம் டாக்டர்வெற்று பரபரப்பையோ, வீண் குழப்பத்தையோ உண்டாக்குவது இந்த கவர் ஸ்டோரியின் நோக்கம் இல்லை… மேலோட்டமாக குற்றம் சாட்ட வேண்டிய அவசியமும் இல்லை. வேறு எந்த பத்திரிகைகளிலும் இல்லாத அளவுக்கு, ‘குங்குமம் டாக்டர்’ இதழில் அரசு மருத்துவமனைகளின் சிறப்பம்சங்கள் பற்றி பிரத்யேக படங்களுடன் விரிவான கட்டுரைகள் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கின்றன. அரசு மருத்துவமனை மீதான பிம்பம் மாற வேண்டும், குறைகள் சரி செய்யப்பட வேண்டும் என்ற நம்மளவிலான சிறு முயற்சி அது. அந்த தகுதியுடன் அரசு மருத்துவமனைகள் தவறு செய்யும்போது சுட்டிக் காட்டும் உரிமையும், பொறுப்பும் எங்களுக்கு உண்டு. ‘எப்போதாவது நடக்கும் சில தவறுகள் பூதாகாரமாகப் பெரிதுபடுத்தப்படுகிறது’ என்று தன்னிலை விளக்கமளிக்கின்றன அரசு மருத்துவமனைகள். அந்த சிறு தவறும் நிகழக் கூடாது என்பதுதான் எல்லோருடைய கவலையும்… ஏனெனில், பெரும்பாலான எளிய மக்களின் உயிர் ஆதாரமாக இருப்பவை அரசு மருத்துவமனைகள். பொதுமக்களின் இந்த அச்சம், தனியார் மருத்துவமனைகளின் வர்த்தகத்துக்கு சாதகமாக மாறிவிடும் அபாயம் இருப்பதையும் புரிந்து, மிகுந்த கவனத்துடன் இந்த கவர் ஸ்டோரி தொகுக்கப்பட்டிருக்கிறது. அலட்சியங்கள், காரணங்கள், சரி செய்ய நம் முன் இருக்கும் வாய்ப்புகள் பற்றி நிபுணர்கள் அலசுகிறார்கள். வாருங்கள்… ஓர் ஆக்கப்பூர்வமான விவாதத்தின் மூலம் Zero Error என்ற இடத்துக்கு முன்னேறுவோம் !– ஆசிரியர்

Related posts

பிரபாஸ் போல் வலுவாக… ஃபிட்னெஸ் டிப்ஸ்!

கண் கருவளையம் தடுக்கும் வழிகள்!

புதினா நீரின் நன்மைகள்!