தொகுதியை மேலும் மேம்படுத்துவேன்: அமைச்சர் ஜெயக்குமார் பேச்சு

தண்டையார்பேட்டை: ராயபுரம் தொகுதி அதிமுக வேட்பாளர் அமைச்சர் ஜெயக்குமார், வண்ணாரப்பேட்டை எம்.சி.ரோடு, ஜி.ஏ.ரோடு, சிமின்ட்ரி சாலை, தொப்பை தெரு, சூழல்மேத்தை, ஆதாம்தெரு, எம்.எஸ்.கோயில் தெரு உள்ளிட்ட பகுதிகளில் வீதிவீதியாக நடந்து சென்று பொதுமக்கள் மற்றும் சாலையோர கடைகளில் இரட்டை இலை சின்னத்துக்கு வாக்கு சேகரித்தார். தொடர்ந்து, ராயபுரம் பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசுகையில், ‘‘ராயபுரம் தொகுதிக்கு உட்பட்ட ராபின்சன் பூங்காவில் ஆக்கிரமிப்புகளை அகற்றி, தொகுதி மேம்பாட்டு நிதியில் சுற்றுச்சுவர், நடைபாதை, மின்விளக்கு, கழிப்பறை உள்பட பல வசதிகளை செய்து கொடுத்துள்ளேன். இந்த பூங்காவை 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். சத்துணவு கூடங்கள், சமுதாய கூடங்கள், நியாய விலை கடைகள், பூங்காக்கள், உடற்பயிற் சிகூடங்கள், பள்ளிகளில் குடிநீர் வசதி, அடிப்படை கட்டமைப்பு வசதி போன்றவற்றை செயல்படுத்த தொகுதி மேம்பாட்டு நிதியை 100 சதவீதம் உபயோகித்து உள்ளேன்.முக்கியமாக ஸ்டான்லி மருத்துவமனைக்கு தேவையான சிகிச்சை உபகரணங்கள், கட்டிடங்களுக்கு அதிக நிதி ஒதுக்கி செயல்படுத்தியுள்ளேன். கொரோனா காலத்தில் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் படுக்கை வசதிகளை விரிவு படுத்தியுள்ளேன். ராயபுரம் தொகுதியில் குடிசை வீடுகளே இல்லாத நிலையை உருவாக்க மூலகொத்தலம் ராமதாஸ் நகர் பகுதி மக்களுக்கு, காட்பாடா பகுதியில் பிரமாண்ட அடுக்குமாடி குடியிருப்பு கட்டிதந்துள்ளேன். இப்படி தொகுதி மக்களுக்கு பல்வேறு கட்டமைப்பு வசதி செய்துள்ளேன். ராயபுரம் தொகுதியை மேலும் மேம்படுத்த பல்வேறு நடவடிக்கை எடுக்க உள்ளேன். எனவே, இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து என்னை பெருவாரியான வாக்குவித்தியாசத்தில் வெற்றிபெற செய்யுங்கள், என்றார்….

Related posts

அதிக மதிப்பெண் எடுத்திருந்தாலும் தேர்ச்சி பெறாத ‘மாணவர்’ காங்கிரஸ்: அமித் ஷா விமர்சனம்

சொல்லிட்டாங்க…

ஆளுநரின் அனுமதிக்கு எதிரான வழக்கு; கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் மனு தள்ளுபடி: அரசியல் ரீதியிலான சிக்கலால் காங்கிரஸ் ஆலோசனை