தையூர் ஊராட்சியில் ரூ.10 லட்சம் மதிப்பில் ரேஷன் கடை திறப்பு

திருப்போரூர்: திருப்போரூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட தையூர் ஊராட்சியில், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.10 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட ரேஷன் கடை திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இதில், தையூர் ஊராட்சி மன்ற தலைவர் எஸ்.குமரவேல் தலைமை தாங்கினார். துணை தலைவர் சேகர், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் நந்தினி நரேஷ்குமார், தனலட்சுமி கோவிந்தசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நாவலூர் நகர கூட்டுறவு கடன் சங்க தலைவர் பிருத்திவிராஜன் வரவேற்றார். இதில், திருப்போரூர் எம்எல்ஏ எஸ்.எஸ்.பாலாஜி கலந்து கொண்டு புதிய ரேஷன் கடையை திறந்து வைத்து, பொதுமக்களுக்கு பொருட்களை வழங்கினார்.

Related posts

தேன்கனிக்கோட்டையில் குப்பை கழிவுகளை சேகரிக்கும் பணிக்கு ₹26.50 லட்சம் மதிப்பில் டிப்பர் லாரி பேரூராட்சி கூட்டத்தில் தீர்மானம்

அரூர் கோட்டத்தில் சாராயம், மது விற்ற 72 பேர் கைது 1420 மதுபாட்டில், கஞ்சா பறிமுதல்

பொம்மிடி, பாப்பிரெட்டிபட்டியில் குட்கா விற்ற 2 கடைகளுக்கு சீல்