தேவாரம் பகுதியில் கொசு ஒழிப்பு நடவடிக்கை தேவை: பொதுமக்கள் வலியுறுத்தல்

 

தேவாரம், ஜூலை 5: தேனி மாவட்டம் தேவாரம் பேரூராட்சியில், வடக்கு தெரு, அப்பாவு பிள்ளை நகர், திடீர் நகர், சந்தை தெரு உள்ளிட்ட பகுதிகளை அடங்கிய 18 வார்டுகள் உள்ளன. கடந்த சில தினங்களுக்கு முன்பு பெய்த மழையால், இப்பகுதிகளில் உள்ள தெருக்களில் மழைநீர் தேங்கி கிடக்கிறது. இதனால் கொசுக்கள் உற்பத்தி அதிகரித்து வருகிறது.

கொசுத் தொல்லைகளால் பகல் நேரங்களிலேயே பொதுமக்கள் வீடுகளில் இருக்க முடியாத நிலை உள்ளது. மேலும் கொசுக்களால் மர்ம காய்ச்சல் உள்ளிட்ட நோய்த்தொற்று ஏற்படும் அபாயமும் உள்ளது. ஆகையால் கொசுக்களைக் கட்டுப்படுத்த பேரூராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வை பொதுமக்களுக்கு ஏற்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related posts

சிவகாசி கண்மாய் கரையில் நடைமேடை பணிகள் தீவிரம்

நாட்டாண்மையை தாக்க முயற்சி: நள்ளிரவில் கிராமத்தினர் சாலை மறியல்

நாளைய மின்தடை