தேவதானப்பட்டி அருகே விவசாய தோட்டத்தில் ஆடுகளை மேய்த்ததால் கோஷ்டி மோதல்: 4 பேர் மீது வழக்கு

 

தேவதானப்பட்டி, ஜூலை 23: தேவதானப்பட்டி அருகே வடுகபட்டிமேலக்காமக்காபட்டியைச் சேர்ந்தவர் ஜெயராஜ்(50). இவர் அதே பகுதியில் ராஜாங்கம் என்பவரது தோட்டத்தில் காவலாளியாக வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம் கீழக்காமக்காபட்டியைச் சேர்ந்த சிவனாண்டி மகள் செல்வி(50) என்பவர் தனது ஆடுகளை மேய்த்துக்கொண்டிருந்துள்ளார். அப்போது அதில் சில ஆடுகள் ஜெயராஜ் காவல் காக்கும் தோட்டத்திற்குள் புகுந்துள்ளது.

மேலும் செல்வி என்பவர் தோட்டத்தில் உள்ள எலுமிச்சை பழங்களை திருடிச்செல்வது வழக்கமாக கொண்டுள்ளதாக கூறி ஜெயராஜ் சத்தம் போட்டுள்ளார். இதில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டு கோஷ்டி மோதலாக மாறியுள்ளது. இதில் செல்வியின் சகோதரர் மாயன்(39) என்பவருக்கும், ஜெயராஜிற்கும் காயம் ஏற்பட்டுள்ளது. இரண்டு தரப்பு புகாரைப் பெற்று ஜெயமங்கலம் போலீசார் ஜெயராஜ் மற்றும் செல்வி, மாயன், தர்மர் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related posts

துறையூரில் அரசு உதவி பெறும் பள்ளியில் 326 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்

கண்ணுக்குழி ஊராட்சியில் புதிய பேருந்து வழித்தடம் துவக்கம்

நெல்லில் நவீன ரக தொழில் நுட்ப பயிற்சி