தேர்வுக்குழு எச்சரிக்கை பெங்களூரு பறந்தார் ஹர்திக் பாண்ட்யா

மும்பை: இந்திய அணியின் அதிரடி ஆல்ரவுண்டராக வலம்வந்த ஹர்திக் பாண்ட்யா காயம் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக வே சரிவர வாய்ப்பு கிடைக்காமல் தவித்து வருகிறார்.கடைசியாக கடந்த டி20 உலகக்கோப்பை தொடரின் போது இந்திய அணிக்கு விளையாடிய அவருக்கு, மீண்டும் அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை. சரியான உடற்தகுதி இல்லாதபோதும், ஹர்திக் பாண்ட்யா மீது பிசிசிஐ அதிக நம்பிக்கை வைத்துள்ளது. வரும் டி20 உலகக்கோப்பை அணியில் ஆடும் லெவனில் ஹர்திக் பாண்ட்யாவை சேர்க்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. மேலும் மற்ற வீரர்கள் தேர்வையும் தற்போதே தொடங்கிவிட்டது. இதற்காக இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்காமல் உள்ள வீரர்களில் இருந்து 25 பேரை தேர்வு செய்து பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு அழைத்தது. அங்கு அவர் கள் தீவிர பயிற்சி மேற்கொண்டு, உடற்தகுதியை நிரூபிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அந்த 25 வீரர்களில் ஹர்திக்கும் ஒருவர். ஆனால் ஹர்திக் அதனை மதிக்காமல் பிசிசிஐ.யின் அழைப்பை ஏற்காததோடு, எந்த பதிலும் அளிக்காமல் இருந்து வந்தார். இதனால் தேர்வுக்குழு அதிகாரிகள் அதிருப்தி அடைந்தனர். இதையடுத்து, பாண்ட்யாவுக்கு பிசிசிஐ எழுதியுள்ள கடிதத்தில், “நீங்கள் பெங்களூருக்கு செல்லவில்லை என்றால், இனி இந்திய அணியில் உங்களை சேர்க்க பரிந்துரைக்ககூட செய்ய இயலாமல் போய்விடும்’’ என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அதிர்ந்த ஹர்திக் பாண்ட்யா அவசர அவசரமாக பெங்களூர் பறந்தார். அங்கு முன்னணி வீரர்கள் கே.எல்.ராகுல், ஷிகர் தவான், புவனேஷ்வர் குமார் உள்ளிட்ட மற்ற வீரர்களுடன் சேர்ந்து தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். இதில் பாண்ட்யா தேறும்பட்சத்தில் தென்னாப்பிரிக்க தொடரில் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் எனக் கூறப்படுகிறது….

Related posts

யூரோ கோப்பை கால்பந்து சுவிட்சர்லாந்தை வீழ்த்தி இங்கிலாந்து அரையிறுதிக்கு தகுதி: சேம்சைடு கோலால் வெளியேறியது துருக்கி

13 ரன் வித்தியாசத்தில் ஜிம்பாப்வே அணியிடம் இந்தியா அதிர்ச்சி தோல்வி

தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக டி20 போட்டி: வெற்றியை தொடங்குமா இந்தியா