தேர்தல் விதி மீறிய 9 வழக்குகள் பதிவு வேலூர் மாவட்டத்தில் ஒரே நாளில்

வேலூர், மார்ச் 31: தேர்தல் விதிமீறல் தொடர்பாக வேலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் ஒரே நாளில் 9 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் 39 தொகுதிகள், புதுச்சேரி ஒரு தொகுதி என 40 நாடாளுமன்ற தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு ஒரே கட்டமாக வரும் 19ம் தேதி நடக்கிறது. இத்தேர்தலில் அரசியல் கட்சிகள், வேட்பாளர்கள் மற்றும அவரது ஆதரவாளர்கள், பொது இடங்களிலும், தனியார் இடங்களிலும் அனுமதியின்றி சுவர் விளம்பரம் ஒட்டுவதோ அல்லது சுவரொட்டிகள், ஸ்டிக்கர்கள் ஓட்டுவதோ, சுவர்களில் எழுதுவதோ கூடாது என்று தேர்தல் ஆணையம் தனது நடத்தை விதிகளில் கூறியுள்ளது. ஆனாலும் தினமும் தேர்தல் நடத்தை விதிமீறல் தொடர்பான புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன. அந்த வகையில் நேற்று முன்தினம் காலை முதல் இரவு வரை லத்தேரி காவல் நிலையத்தில் ஒரு வழக்கும், மேல்பாடி காவல் நிலையத்தில் ஒரு வழக்கும், பேரணாம்பட்டு காவல் நிலையத்தில் ஒரு வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், கே.வி.குப்பம் காவல் நிலையத்தில் ஒரு வழக்கும், குடியாத்தம் தாலுகா காவல் நிலையத்தில் 2 வழக்குகளும், குடியாத்தம் டவுன் காவல் நிலையத்தில் 3 வழக்குகளும் என மொத்தம் 9 வழக்குகள் அனுமதியின்றி அரசியல் கட்சிகள் சுவர் விளம்பரம் வரைந்ததற்காக பதிவு செய்யப்பட்டுள்ளன.

Related posts

பட்டாசு திரிகள் பறிமுதல்

2 மாதமாக மூடி கிடக்கும் நிறுவனம் சீட்டு பணம் வசூலித்து மோசடி: ஏமாந்தவர்கள் புகார் மனு

பள்ளியில் அடிப்படை வசதி வேண்டும் பெற்றோர் ஆசிரியர் கழகம் மனு