தேர்தல் வாக்குறுதி அளிக்க உபி.யில் 12,000 கிமீ தூரம் பிரியங்கா நடை பயணம்

லக்னோ: உத்தர பிரதேசம், உத்தரகாண்ட் உள்ளிட்ட 5 மாநிலங்களில் அடுத்தாண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. கடந்த 2017ம் ஆண்டு உபி.யில் நடந்த தேர்தலில் பாஜ 312 இடங்களில் வென்று, தொடர்ந்து 2வது முறையாக ஆட்சி அமைத்தது. காங்கிரஸ் வெறும் 7 இடங்களுடன் படுதோல்வியை சந்தித்தது. இந்நிலையில், அடுத்தாண்டு இம்மாநிலத்தில் நடைபெறும் தேர்தலில் ஆட்சியை பிடிக்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. இதற்கான தேர்தல் வியூகம், ஆலோசனை வழங்குவதற்கான குழுவை அக்கட்சி அமைத்துள்ளது.தேர்தல் ஏற்பாடுகளை கவனிக்க, 3 நாள் பயணமாக உபி வந்துள்ள பிரியங்கா காந்தி, இந்த குழுவுடன் நேற்று ஆலோசனை நடத்தினார். ஆலோசனைப்படி, உத்தர பிரதேச கிராமங்கள், நகரங்களில் பிரியங்கா காந்தி 12,000 கி.மீ. தூரம் நடைபயணம் சென்று,  பிரசாரம் செய்ய உள்ளார். இந்த பயணத்தின் போது மக்கள் கூறும் கருத்துகள், பரிந்துரைகளின் அடிப்படையில், தேர்தல் வியூகம் அமைக்கப்படும் என்று காங்கிரஸ் தெரிவித்துள்ளது.குண்டர்களுக்கு சீட் கிடையாதுபகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி கூறுகையில், “உபி தேர்தலில் அடிதடி, மாபியா கும்பல் குண்டர்களுக்கு பகுஜன் சமாஜ் கட்சியில் சீட் வழங்க மாட்டேன். தாதா கும்பல் தலைவராக இருந்து அரசியல்வாதியாக மாறிய முக்தார் அன்சாரிக்கு மாவ் தொகுதியில் இம்முறை போட்டியிட வாய்ப்பு தர மாட்டேன். அவருக்கு பதிலாக அத்தொகுதியில் உபி பகுஜன் சமாஜ் தலைவர் பீம் ராஜ்பர் போட்டியிடுவார்,’’ என்றார்.ஜெய் மாதா தெ ராகுல் கோஷம்ஜம்மு காஷ்மீருக்கு 2 நாள் பயணமாக நேற்று முன்தினம் சென்ற காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, கத்ராவில் இருந்து வைஷ்ணவ தேவி குகை கோயிலுக்கு 14 கிமீ தூரம் நடந்து சென்று தரிசனம் செய்தனர். நேற்று அவர் ஜம்முவில் நடந்த காங்கிரஸ் தொண்டர்கள் கூட்டத்தில் பங்கேற்றார். அப்போது கூட்டத்தினரை பார்த்து, `ஜெய் மாதா தெ’ என்று கோஷமிடும்படி அறிவுறுத்தினார். அவர் இப்படி கோஷமிட, தொண்டர்களும் ‘ஜெய் மாதா தெ’ என்று கோஷமிட்டனர்….

Related posts

விக்கிரவாண்டியில் திமுகவை வெற்றிபெற செய்யுங்கள்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

வெளிநாடு செல்லும் அண்ணாமலை; தமிழக பாஜவை நிர்வகிக்க கமிட்டி அமைக்க திட்டம்: தேர்தலில் வேலை செய்யாதவர் பதவியை பறிக்க முடிவு

அதிமுக பகுதி செயலாளர் கொலை குற்றவாளிகளை உடனே கைது செய்ய வேண்டும்: எடப்பாடி வலியுறுத்தல்