தேர்தல் வழிகாட்டு குழு தலைவர் பதவி ஆனந்த் சர்மா திடீர் விலகல்: காங்கிரசில் பரபரப்பு

புதுடெல்லி: இமாச்சல பிரதேச தேர்தல் வழிகாட்டுதல் குழு தலைவர் பதவியில் இருந்து  காங்கிரஸ் மூத்த தலைவர் ஆனந்த் சர்மா திடீரென விலகி உள்ளார். விரைவில் சட்டப்பேரவை தேர்தலை சந்திக்க உள்ள மாநிலங்களின் தேர்தல் பொறுப்பாளர்களை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி சில தினங்களுக்கு முன் நியமித்தார். அதில், காஷ்மீர் தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட குலாம் நபி ஆசாத், மூத்த தலைவரான தன்னை கட்சி மேலிடம் அவமானப்படுத்துவதாக கூறி, அந்த பொறுப்பை ஏற்க மறுத்தார். இது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், இமாச்சல பிரதேச காங்கிரஸ் தேர்தல் வழிகாட்டுதல் குழு தலைவராக நியமிக்கப்பட்ட மூத்த தலைவர் ஆனந்த் சர்மாவும் நேற்று இப்பதவியில் இருந்து விலகினார். சோனியாவுக்கு அவர் அனுப்பியுள்ள ராஜினாமா கடிதத்தில், ‘கட்சி கூட்டங்கள் தொடர்பாக என்னிடம் யாரும் ஆலோசனை நடத்தவில்லை. அழைப்பதும் இல்லை. இதனால், எனது சுயமரியாதை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், தேர்தல் வழிகாட்டு குழு பதவியில் இருந்து விலகுகிறேன்,’ என கூறியுள்ளார். இதனால், காங்கிரசுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. காங்கிரஸ் தலைமை மீது அதிருப்தி கொண்டுள்ளவர்கள் ஜி23 தலைவர்கள் என அழைக்கப்படுகின்றனர். அதில், குலாம்நபி ஆசாத்,  ஆனந்த் சர்மா முக்கியமானவர்கள்….

Related posts

மத்திய பிரதேச மாநிலம் போபாலில் ரூ.1,800 கோடி மதிப்புள்ள மெபெட்ரோன் போதைப்பொருள் பறிமுதல்

சபரிமலையில் மகரவிளக்கு பூஜையின் போது இணையம் மூலம் பதிவு செய்யும் பக்தர்கள் மட்டுமே தரிசனத்துக்கு அனுமதி

கர்நாடக மாநிலம் பெல்லாரியில் கனமழையால் நூற்றுக்கணக்கான லாரிகள் வெள்ளத்தில் மூழ்கியது