தேர்தல் பாதுகாப்பு பணி போலீசார் கொடி அணிவகுப்பு

மதுரை, ஏப். 6: நாடாளுமன்ற தேர்தலையொட்டி, மதுரை, திருப்பரங்குன்றத்தில் நேற்று போலீசாரின் கொடி அணிவகுப்பு நேற்று நடந்தது. நாடாளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டு நடத்தை விதிகள் அமலில் உள்ளது. இந்நிலையில், ஜனநாயகத்தை வலுப்படுத்திட அனைவரும் வாக்காளிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியும், பொதுமக்கள் சுதந்திரமாகவும், பாதுகாப்பாகவும் தங்கள் ஜனநாயக கடமையை நிறைவேற்றவும் நாடு முழுவதும் போலீசார் மற்றும் துணை ராணுவத்தினர் பாதுகாப்பு பணிகளை தீவிரப்படுத்தி உள்ளனர்.

இதுகுறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்திடும் வகையிலும், மதுரை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருப்பதை உணர்த்துவதற்காகவும் போலீசார் மற்றும் சிஐஎஸ்எப் எனப்படும் மத்திய தொழில் பாதுகாப்பு படையினரின் கொடி அணிவகுப்பு நடத்தப்பட்டு வருகிறது. இதன்படி மதுரை திருப்பரங்குன்றம் சரகம் ஹார்விப்பட்டி பூங்கா சந்திப்பில் இருந்து நேற்று திருநகர் 6 வது பஸ் நிறுத்தம் வரை போலீசார் மற்றும் மத்திய பாதுகாப்பு படையினர் பங்கேற்ற கொடி அணிவகுப்பு நடைபெற்றது. இதில் மதுரை தெற்கு துணை கமிஷனர் காரத் கருண் உத்தவ்ராவ் தலைமையில், திருப்பரங்குன்றம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர்கள், எஸ்.ஐக்கள், போலீசார் மற்றும் மத்திய பாதுகாப்பு படையினர் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

Related posts

சிவகாசி கண்மாய் கரையில் நடைமேடை பணிகள் தீவிரம்

நாட்டாண்மையை தாக்க முயற்சி: நள்ளிரவில் கிராமத்தினர் சாலை மறியல்

நாளைய மின்தடை